முகப்பு /செய்தி /இந்தியா / நாடாளுமன்றத் திறப்பு விழாவை காங்கிரஸ் புறக்கணிப்பதால் பாதிப்பு இல்லை - அமித் ஷா

நாடாளுமன்றத் திறப்பு விழாவை காங்கிரஸ் புறக்கணிப்பதால் பாதிப்பு இல்லை - அமித் ஷா

அமித் ஷா

அமித் ஷா

புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவை புறக்கணிப்பதன் மூலம் எதிர்கட்சிகள் அற்ப அரசியல் செய்வதாக அமித்ஷா சாடினார்.

  • Last Updated :
  • Assam, India

நாடாளுமன்றத் திறப்பு விழாவை காங்கிரஸ் தலைவர்கள் புறக்கணிப்பதால் எந்த பாதிப்பும் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலம் கவுஹாத்தியில் நடைபெற்ற அரசு வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பேசிய அமித்ஷா, ’தேர்தல் வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றி உள்ளது என்று கூறினார். புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவை புறக்கணிப்பதன் மூலம் எதிர்கட்சிகள் அற்ப அரசியல் செய்வதாக அமித்ஷா சாடினார்.

இதனிடையே மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட 3 நாட்கள் அங்கு தங்க இருப்பதாக அமித்ஷா கூறினார். இரண்டு தரப்பினரும் அமைதிக் காக்குமாறு அறிவுறுத்திய அவர், அனைவருக்கும் நியாயம் கிடைக்கும் என்று உறுதி அளித்தார்.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைக்க வேண்டும் என உத்தரவிடக்கோறி தாக்கல் செய்யப்பட்ட மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

top videos
    First published:

    Tags: Amit Shah, Central Vista, Congress