முகப்பு /செய்தி /இந்தியா / பிரதமர் மோடியின் மான் கி பாத் 100-வது நிகழ்ச்சி விழா... மும்பையில் அமித்ஷா நேரில் பங்கேற்பு...

பிரதமர் மோடியின் மான் கி பாத் 100-வது நிகழ்ச்சி விழா... மும்பையில் அமித்ஷா நேரில் பங்கேற்பு...

உள்துரை அமைச்சர் அமித் ஷா

உள்துரை அமைச்சர் அமித் ஷா

பிரதமர் மோடியின் 100-வது மான் கி பாத் நிகழ்ச்சி விழாவில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்கவுள்ளார்.

  • Last Updated :
  • Mumbai, India

நரேந்திர மோடி 2014-ம் ஆண்டு பிரதமராக பதவியேற்றது முதல் ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை அன்று வானொலி மூலம் மக்களிடம் பேசுவது வழக்கமாக உள்ளது. மனதின் குரல் என்று பொருள்படும் மான் கீ பாத் என்ற நிகழ்ச்சி மூலம் மக்களிடையே உரையாற்றிவருகிறார்.

அந்த நிகழ்ச்சியில் அரசியல்சாராது பல்வேறு நல்ல விஷயங்கள், நன்னெறி கருத்துகள், அறியப்படாத சாதனை மனிதர்களைப் பற்றி எடுத்துரைப்பார். தமிழ்நாட்டில் சத்தமின்றி சாதனைபுரிந்த பலரது மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் தேசிய அளவில் பிரபலப்படுத்தினார் பிரதமர் மோடி. இதுவரை 99 வாரங்கள் பிரதமர் நரேந்திர மோடி வானொலியில் உரையாற்றியுள்ளார்.

அவருடைய 100-வது மான் கி பாத் நிகழ்ச்சி நாளை நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியை இந்தியா முழுவதும் மக்களிடையே பரவலாக எடுத்துச் செல்ல பா.ஜ.கவினர் முடிவு செய்துள்ளனர். கட்சியின் மூத்த தலைவர்கள் முதல் மாவட்ட நிர்வாகிகள் வரை மக்களை ஒருங்கிணைத்து மோடியின் மான் கி பாத் நிகழ்ச்சியை ஒலிபரப்ப உள்ளனர்.

top videos

    அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் விலி பார்லே பகுதியில் மான் கி பாத்தின் 100-வது நிகழ்ச்சில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கவுள்ளார். அதேபோல, கன்டிவாலி பகுதியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்கவுள்ளார்.

    First published:

    Tags: Amit Shah, Modi