முகப்பு /செய்தி /இந்தியா / 58 வயதில் குழந்தை பெற்றுக்கொண்ட மாமியார்... விசித்திரமான புகாரை அளித்த மருமகள்...!

58 வயதில் குழந்தை பெற்றுக்கொண்ட மாமியார்... விசித்திரமான புகாரை அளித்த மருமகள்...!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தனக்கு சொத்து கிடைக்கக் கூடாது என்ற நோக்கத்தில் மாமியார் குழந்தை பெற்றெடுத்துள்ளதாக மருமகள் புகார் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Uttar Pradesh, India

உத்தர பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவர் தனது மாமியார் மீது விசித்திரமான புகார் ஒன்றை குடும்ப ஆலோசனை மையத்தில் தந்துள்ளார்.

ஆக்ராவில் கமலா நகர் பகுதியை சேர்ந்த இளைஞருக்கும் சைன்யா பகுதியை சேர்ந்த இளம் பெண்ணுக்கும் 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு குழந்தைகள் ஏதும் இல்லை.  ஜிம் ட்ரெய்னராக  இருந்த அந்த இளைஞர், 2 ஆண்டுகளுக்கு முன்னர் மாரடைப்பால் உயிரிழந்தார். கணவரை இழந்த அப்பெண் தனது தாய் வீட்டில் வசிக்கத் தொடங்கினார்.

உயிரிழந்த பெண்ணின் கணவர் அவரது மாமனார் மாமியாருக்கு ஒரே பிள்ளை ஆவார். இந்நிலையில், கணவரை இழந்த பெண் தனது மாமனார் வீட்டில் சொத்தில் பங்கு கொடுங்கள் எனக் கேட்கத் தொடங்கினார். இதற்கு மனமில்லாத கணவர் வீட்டார் அதிரடி முடிவை எடுத்தனர்.

தனது ஒரே பிள்ளையும் இறந்துவிட்டதால் வாரிசு இல்லாமல் போகக் கூடாது என்ற எண்ணத்துடமும், மருமகளுக்கு சொத்து போகக் கூடாது என்பதாலும் பெண்ணின் மாமியார் தனது 58 வயதில் கர்ப்பம் தரித்து ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார். 5 மாத குழந்தை தற்போது பெண்ணின் மாமியாருக்கு உள்ளது. தனக்கு சொத்து கிடைக்கக் கூடாது என்ற நோக்கத்தில் தான்   மாமியார் குழந்தையை பெற்றெடுத்துள்ளார் என கணவரை இழந்த அப்பெண் குடும்ப நல ஆலோசனை மையத்தில் புகார் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: பாலியல் தொழிலில் ஈடுபடுவது குற்றம் அல்ல.. நீதிமன்றம் பரபரப்பு கருத்து... பின்னணி என்ன?

top videos

    தனக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இரு தரப்பு வாதத்தையும் கேட்ட அலுவலர்கள் வழக்கில் சுமூக தீர்வு எட்ட முயற்சி செய்து வருகின்றனர். இரு தரப்பும் விடாபிடியாக உள்ள நிலையில் விசாரணையை வேறு தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

    First published:

    Tags: Crime News, Family Court, Mother-in-law, Uttar pradesh