முகப்பு /செய்தி /இந்தியா / 4 மாதங்களில் இல்லாத வகையில் தினசரி கோவிட் பாதிப்பு எண்ணிக்கை உயர்வு... 6 மாநிலங்களில் வேகமெடுக்கும் பரவல்

4 மாதங்களில் இல்லாத வகையில் தினசரி கோவிட் பாதிப்பு எண்ணிக்கை உயர்வு... 6 மாநிலங்களில் வேகமெடுக்கும் பரவல்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கடந்த 4 மாதங்களில் இல்லாத வகையில் நாட்டின் தினசரி கோவிட் பாதிப்பு எண்ணிக்கை 800ஐ தாண்டியது இதுவே முதல் முறை.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

பல மாதங்களுக்குப் பின் நாட்டில் கோவிட்-19 தொற்று பரவல் மீண்டும் திடீரென உயரத் தொடங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தினசரி கோவிட் பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சக புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் 843 பேருக்கு கோவிட் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 4 மாதங்களில் இல்லாத வகையில் நாட்டின் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 800ஐ தாண்டியது இதுவே முதல் முறை.

மேலும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் 5 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5,389 ஆக இருப்பதாக புள்ளிவிவரம் கூறுகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்னர் கோவிட் பாதிப்பு வேகமாக உயரும் மாநிலங்களான தமிழ்நாடு, குஜராத், மகாராஷ்டிரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா ஆகியவை உஷார் நிலையில் இருக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது.

கோவிட்-19-ன் உருமாறிய தொற்றுகளான XBB.1 மற்றும் XBB.1.16 ஆகியவை தீவிரமாக பரவுவதே இந்த திடீர் எண்ணிக்கை உயர்வுக்கு காரணம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த டிசம்பர் 15ஆம் தேதி முதல் நாட்டில் இன்ஃப்ளுயன்சா H3N2 ( Influenza A subtype H3N2 ) என்ற வைரஸ் அதிக அளவில் பரவி வருவதாக ICMR மற்றும் IMA அமைப்புகள் வழிகாட்டுதல்களையும் எச்சரிக்கையும் தெரிவித்திருந்தது.

இதையும் படிங்க: “நான் பிரதமர் அலுவலக அதிகாரி...” Z+ பாதுகாப்பு, குண்டு துளைக்காத காரில் வலம்வந்த மோசடி நபர்..!

இந்த தொற்று பரவல் குறித்து வெளியிட்ட அறிக்கையில், இந்த பருவ கால காய்ச்சல் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 15 வயதுக்கு குறைவானர்கள் மத்தியில் தான் அதிகம் காணப்படுகிறது. இதனிடையே கோவிட் தொற்றும் உயர தொடங்கியுள்ளாதல் மக்கள் முன்னெச்சரிக்கை உணர்வுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

First published:

Tags: Corona, Covid-19