முகப்பு /செய்தி /இந்தியா / மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல்... மத்திய சுகாதாரத்துறையின் முக்கிய அறிவுறுத்தல்!

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல்... மத்திய சுகாதாரத்துறையின் முக்கிய அறிவுறுத்தல்!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கொரோனா தொற்றை எதிர்கொள்வதற்கான திருத்தியமைக்கப்பட்ட வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை வெளியிட்டுள்ளது.

  • Last Updated :
  • Delhi, India

இந்தியாவில் கடந்த சில நாள்களாக மீண்டும் கோவிட்-19 தொற்றுப் பரவல் உயர்ந்துள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 129 நாள்களில் இல்லாத வகையில் புதிதாக 1,071 பேருக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, நாட்டில் கோவிட்-19 பாதிப்புக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் 5,915ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் புதிதாக 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தொற்றிலிருந்து 39 பேர் குணமடைந்த நிலையில், சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 363ஆக உயர்ந்துள்ளதாக மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டைப் போன்றே, நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, கொரோனா தொற்றை எதிர்கொள்வதற்கான திருத்தியமைக்கப்பட்ட வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை வெளியிட்டுள்ளது.

அதில், பாக்டீரியா தொற்று இருப்பது உறுதிசெய்யப்படாதவரை, ஆன்டிபயாடிக் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் மற்றவர்களிடமிருந்து இடைவெளியுடன் இருப்பது, வீட்டுக்குள் முகக்கவசங்களை அணிந்துகொள்வது, வெப்பநிலை மற்றும் ஆக்சிஜன் அளவை கண்காணிப்பது ஆகிய நடவடிக்கைகளை தொடர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பருக்கள் முதல் பொடுகு வரை... வேம்பின் நன்மைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

top videos

    மூச்சுவிடுவதில் சிரமம், அதிகஅளவில் காய்ச்சல் அல்லது தீவிர இருமல் ஆகியவை 5 நாட்களுக்கு மேல் நீடித்தால், உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. மிதமான அல்லது தீவிர பாதிப்பு உள்ளவர்கள், 5 நாட்களுக்கு ரெம்டெசிவிர் மருந்தை பயன்படுத்தலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Antibiotics, Covid-19, Health and welfare department