முகப்பு /செய்தி /இந்தியா / பிரதமர் மோடிக்கு விருந்தளிக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்...!

பிரதமர் மோடிக்கு விருந்தளிக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்...!

பிரதமர் நரேந்தர மோடி - அதிபர் ஜோ பைடன்

பிரதமர் நரேந்தர மோடி - அதிபர் ஜோ பைடன்

இந்திய பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், அவரது மனைவி ஜில் பைடனும் விருந்து அளிக்க உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

  • Last Updated :
  • interna, IndiaAmericaAmerica

பிரதமர் நரேந்திர மோடி, வரும் ஜூன் மாதத்தில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கும் நிலையில், பிரதமருக்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜூன் 22ஆம் தேதி விருந்து அளிப்பார் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக, வரும் ஜூன் 21ஆம் தேதி அமெரிக்காவுக்கு செல்ல உள்ளார். நியூயார்க், வாஷிங்டன், சிகாகோ ஆகிய பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார்.

இந்தப் பயணத்தின்போது, மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், அவரது மனைவி ஜில் பைடனும் 22ஆம் தேதி இரவு விருந்து அளிக்க உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

மேலும், இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவை வலுப்படுத்தும் வகையிலும், இரு நாட்டு மக்கள் இடையே நிலவும் பந்தம் மற்றும் நட்புறவுவை மேம்படுத்தும் வகையிலும் பிரதமரின் பயணம் அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

top videos

    இதேபோல, வெளிப்படையான, வளமான மற்றும் பாதுகாப்பான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உருவாக்க வேண்டும் என்ற இரு நாடுகளின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் என்றும் வெள்ளை மாளிகை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

    First published:

    Tags: America, Joe biden, PM Narendra Modi