அசாமில் செயல்பாட்டில் உள்ள அனைத்து மதரசாக்களும் விரைவில் மூடப்படும்,'' என, அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா ஷர்மா கூறியுள்ளார்.
வடகிழக்கு மாநிலமான அசாமில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் ஹேமந்த பிஸ்வா ஷர்மா முதலமைச்சராக இருக்கிறார். அவர் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடியான சம்பவங்களை நிகழ்த்தி வருகிறார். அதன் வரிசையில் தற்போது அசாம் மாநிலத்தில் இருக்கும் அரசு உதவி பெறும் மதரசாக்களை மூட முடிவெடுத்திருக்கிறார்.
புதிய இந்தியாவிற்கு மத ரீதியிலான பள்ளிகள் தேவையில்லை என்றும் அவர் கருத்து தெரிவித்திருக்கிறார். கர்நாடகா மாநிலம் பெலகாவியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பிஸ்வா ஷர்மா இவ்வாறு பேசியுள்ளார்.
மாநிலத்திற்கும், நாட்டுக்கும் சேவை புரிய மருத்துவர்கள், பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் தான் தேவை. அதற்காக அசாமில் நிறைய பள்ளிகளும் கல்லூரிகளும் தான் தேவை என்றும் பிஸ்வா ஷர்மா பேசியுள்ளார். ஏற்கனவே அசாம் மாநிலத்தில் அரசு உதவி பெறும் 600 மதரசாக்கள் மூடப்பட்டுள்ளன. அதற்கான நிதியும் நிறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து பேசிய ஹேமந்த பிஸ்வ ஷர்மா, காங்கிரஸ்காரர்களை புதிய மொகலாயர்கள் என விமர்சனம் செய்தார். பண்டைய காலத்தில் இந்தியாவிற்குள் நுழைந்த மொகலாயர்கள் நமது இந்தியாவைப் பலவீனமடையச் செய்தார்கள் என்றும், இப்போது அந்த வேலையைக் காங்கிரஸ்காரர்கள் செய்து வருகிறார்கள் என்று சாடியுள்ளார்.
நமது கலாச்சாரத்தை மீட்டெடுத்து புதிய இந்தியாவை கட்டமைக்கும் பணியில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளார் என்றும், அதற்காக நாம் துணை நிற்க வேண்டும் என்றும் பேசிய ஹேமந்த பிஸ்வ ஷர்மா, மக்களுக்குள் பிரிவினையை உருவாக்கச் சிலர் முயற்சிப்பதாகவும், இந்தியர்களாகிய நாம் அனைவரும் மிக உறுதியாக இருக்க வேண்டும் எனவும் பிஸ்வ ஷர்மா பேசியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Assam, Himanta Biswa Sarma, Muslim