முகப்பு /செய்தி /இந்தியா / யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு : அகில இந்திய அளவில் முதல் 3 இடத்தைப் பிடித்து பெண்கள் சாதனை

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு : அகில இந்திய அளவில் முதல் 3 இடத்தைப் பிடித்து பெண்கள் சாதனை

முதல் 3 இடத்தை பிடித்த பெண்கள்

முதல் 3 இடத்தை பிடித்த பெண்கள்

UPSC CSE Exam Result : அகில இந்திய அளவில் முதல் மூன்று இடங்களைப் பெண்கள் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

  • Last Updated :
  • New Delhi, India

மத்திய அரசு தேர்வாணையத்தினால் நடத்தப்படும் யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், அகில இந்திய அளவில் முதல் மூன்று இடங்களைப் பெண்கள் பிடித்து சாதனைப் படைத்துள்ளனர்.

2022 ஆம் ஆண்டிற்கான ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஃப்எஸ் ஆகிய பணிக்கு நடத்தப்படும் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுக்கான இறுதி முடிவுகள் இன்று வெளியாகின. நாடு முழுவதும் 180 ஐஏஎஸ், 200 ஐபிஎஸ் உள்ளிட்ட 1,022 இடங்களுக்கு நடந்த தேர்வில் மொத்தம் 933 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில் 10 இடங்களில் முதல் 4 இடங்களைப் பெண்கள் பிடித்துள்ளனர். குறிப்பாக முதல் 3 இடத்தை பெண்கள் பிடித்து சாதனைப் படைத்துள்ளனர். இதில் முதலிடத்தில் இஷிதா கிஷோர், கரிமா லோஹியா 2-வது இடம், உமா ஹராதி 3-வது இடம் பிடித்தனர். மேலும் 4-வது இடத்தை ஸ்மிருதி மிஸ்ரா பிடித்துள்ளார். தொடர்ந்து, தமிழ்நாடு அளவில் முதலிடத்தைச் சென்னையைச் சேர்ந்த ஜீஜீ என்ற மாணவி பெற்றுள்ளார்.

Also Read : யு.பி.எஸ்.சி. இறுதி தேர்வு முடிவுகள் வெளியீடு : நாடு முழுவதும் 933 பேர் தேர்ச்சி

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுக்கான முதல் நிலை தேர்வு ஜூன் 5 தேதி நடைபெற்று முடிவுகள் ஜூன் 22 வெளியிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மை தேர்வு செப்டம்பர் 16 முதல் 25 வரை நடைபெற்றது. அதிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு டிசம்பர் 6 ஆம் தேதி நேர்காணல் நடைபெற்றது.

top videos

    தற்போது அதற்கான இறுதி முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. தேர்வு முடிவுகளை https://upsc.gov.in/என்று இணையத்தளத்தில் தேர்வு எழுதியவர்கள் தெரிந்துகொள்ளலாம்.

    First published:

    Tags: Exam results, UPSC