முகப்பு /செய்தி /இந்தியா / கர்நாடகாவில் பா.ஜ.க வேட்பாளருக்கு போட்டியாக அதிமுக- வேட்பாளரை அறிவித்த ஈபிஎஸ்..

கர்நாடகாவில் பா.ஜ.க வேட்பாளருக்கு போட்டியாக அதிமுக- வேட்பாளரை அறிவித்த ஈபிஎஸ்..

கர்நாடக தேர்தல்

கர்நாடக தேர்தல்

கர்நாடகாவில் மே 10 ஆம் தேதி ஒரே கட்டமாகச் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.

  • Last Updated :
  • Karnataka, India

கர்நாடக மாநிலம் புலிகேசி நகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகாவில் ஒரே கட்டமாக மே 10ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. நாளையுடன் வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைய உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் புலிகேசி நகர் தொகுதியில், அதிமுக சார்பில் அன்பரசன் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். புலிகேசி நகர் தனித் தொகுதியில் போட்டியிடும் அன்பரசன், கர்நாடக மாநில அதிமுக அவைத் தலைவராக உள்ளார். அதிமுக, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிலையில், புலிகேசி நகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் முரளிக்கு போட்டியாக அதிமுகவும் வேட்பாளரை களமிறக்கியுள்ளது.

Also Read : உலக மக்கள் தொகையில் முதலிடம்.. சீனாவை முந்திய இந்தியா - ஐநா ஆய்வுத் தகவல்

இதுகுறித்து தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, கர்நாடகாவில் பாஜக - அதிமுக கூட்டணி நிலைப்பாடு குறித்து தனக்கு எதுவும் தெரியவில்லை என்று கூறினார். மேலும், கர்நாடக மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளராக உள்ள அண்ணாமலையிடம் கேட்டுச் சொல்வதாகவும் பதிலளித்தார்.

top videos
    First published:

    Tags: AIADMK, Election, Karnataka