இந்தியாவில் பொது சுகாதாரத்திற்கு முக்கிய சவாலாக இருப்பது கால்நடை கழிவுகள். குறிப்பாக, நாம் சாலைகளில் நடக்கும் போது மாட்டு சாணத்தில் கவனமின்றி தவறுதலாக மிதித்திருப்போம். மாடுகள் வளர்ப்பு அதிகம் உள்ள பகுதிகளில் பொதுவெளிகளில் உள்ள மாட்டு சாணம் போன்ற கழிவுகளை அகற்றுவது அரசு நிர்வாகங்களுக்கும் தலையாய பிரச்சனையாக இருக்கும் சூழலில், இதற்கு தீர்வு காண குஜராத்தில் உள்ள அகமதாபாத் மாநகராட்சி புதிய யுக்தியை முன்னெடுத்துள்ளது.
தெருக்களில் கால்நடைகள் திரியும் சிக்கலுக்கு தீர்வு காண குஜராத் உயர் நீதிமன்றம் தொடர் அறிவுறுத்தல்களை கொடுத்து வந்தது. இதையடுத்து அகமதாபாத் மாநகராட்சி நிர்வாகம் இதற்கு தனித்த தீர்வு காணும் விதமாக சாலைகளில் உள்ள மாட்டு சாணங்களை தினம்தோறும் அப்புறப்படுத்தி சுத்தம் செய்ய தனி பணியாளர் அமைப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்காக டென்டர் விட்டு ஆண்டுக்கு ரூ.30 லட்சம் செலவில் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, ஒப்பந்ததார்கள் மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளில் உள்ள சாலைகளை கால்நடை கழிவுகளை சுத்தம் செய்து அப்புறப்படுத்த வேண்டும். இதற்கான தொழிலாளர்கள், டிராக்டர் உள்ள உபகரணங்களை சம்பந்தப்பட்ட ஒப்பந்ததார் ஏற்பாடு செய்து பணியமர்த்த வேண்டும்.
இந்த திட்டம் முறையாக செயல்படுகிறதா எனபதை பொது சுகாதார ஆய்வாளர் தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும். இவர்கள் அப்புறம் செய்து எடுக்கும் மாட்டு சாணத்தில் பிளாஸ்டிக் பை போன்ற ஏனைய கழிவுகள் இல்லாமல் சாணத்தை மட்டுமே எடுக்க வேண்டும். ஏனைய கழிவுகள் கலந்திருக்கும் பட்சத்தில் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மணமேடையில் இப்படி ஒரு ட்விஸ்டா? மணப்பெண்ணின் தங்கையை கரம்பிடித்த மாப்பிள்ளை.. வெளிச்சத்துக்கு வந்த காதல் கதை!
அப்புறப்படுத்தப்படும் சாணத்தை எடை போட்டு அந்த ஆவணத்தை ஒப்பந்ததார் மாநகராட்சி நிர்வாகத்திடம் சமர்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படும் பட்சத்தில் ஏனைய பகுதிகளிலும் நடைமுறைபடுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.