ரூ.2,000 நோட்டுக்களை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு அலுவலகத்தில் கட்டுக்கட்டாக பதுக்கி வைத்திருந்த ரூ.2,000 மதிப்பிலான கோடிக்கணக்கான பணம் வெளியே அம்பலமாகியுள்ளது.
அம்மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் யோஜ்னா பவன் என்ற ஒருங்கிணைந்த அரசு அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் அடித்தளத்தில் உள்ள அறையில் ஒரு அலமாரி உள்ளது. இங்கு பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் நடைபெற்ற சோதனையில், ஒரு புறத்தில் இ-ஃபைலிங் திட்டத்தின் கீழ் உள்ள அரசு கோப்புகளும், மற்றொரு பக்கத்தில் சூட்கேஸ் ட்ராலியும் இருந்துள்ளது.
அந்த சூட்கேஸ் ட்ராலியை திறந்து பார்த்தில் அதில் கட்டுக்கட்டாக ரூ.2,000 நோட்டுகளும், தங்கமும் இருந்துள்ளன. அரசு அலுவலகத்திற்கு இவ்வளவு பணம் மற்றும் தங்கம் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பிடிபட்ட பணத்தை சோதித்ததில் அதில் ரூ.2.31 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் ஒரு கிலோ தங்கம் என மதிப்பிடப்பட்டது.
இந்த அறை பல மாதங்களாவே பூட்டப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் இதில் பணம் எப்படி வந்தது என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சிசிடிவி காட்சிகளை ஸ்கேன் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை பேசி விவாகரத்தான பெண்ணிடம் ரூ.20 லட்சம் சுருட்டிய நபர்
சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் அசோக் கெலாட்டிடம் தலைமை செயலாளர், டிஜிபி ஆகியோர் நேரில் விளக்கம் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் அரசின் ஊழல் ஆட்சியை இந்த சம்பவம் பிரதிபலிப்பதாக எதிர்க்கட்சியான பாஜக புகார் அளித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஏழு அரசு ஊழியர்களை கைது செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Rajasthan