முகப்பு /செய்தி /இந்தியா / ''ஊழல்வாதிகளை எதிர்த்து ஒரு மிஷன் போல செயல்பட்டோம்'' - சிபிஐ விழாவில் பிரதமர் மோடி பேச்சு

''ஊழல்வாதிகளை எதிர்த்து ஒரு மிஷன் போல செயல்பட்டோம்'' - சிபிஐ விழாவில் பிரதமர் மோடி பேச்சு

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

விசாரணை அமைப்புகள் ஆட்சியில் இருந்தவர்களுக்கு ஆதரவாக இருந்ததால், ஊழல் செய்தவர்கள் அச்சம் கொள்ளவில்லை என்றும் பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

  • Last Updated :
  • Delhi, India

சிபிஐயின் 60ஆண்டுகள் நிறைவுசெய்ததையொட்டி, வைர விழா கொண்டாட்டங்களை டெல்லியில் உள்ள விக்யான் பவனில் பிரமதர் மோடி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, எளிய மக்களிடமும் சிபிஐ நம்பிக்கையை ஏற்படுத்தியதாக கூறினார்.

பல குற்றங்களில் சிபிஐ விசாரணைதான் தேவை என்று மக்கள் போராடுவதை காண முடிவதாக பெருமிதம் தெரிவித்த அவர், ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்த தனது அரசு முடிவுடன் உள்ளதாக தெரிவித்தார். ஊழல்வாதிகளை விடவேண்டாம் என சிபிஐ அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். சிபிஐ அமைப்பின் பொறுப்புகள் பலமடங்கு உயர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, ஊழலை தடுப்பதே முக்கிய கடமையாக இருக்கவேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஊழல் செய்வதில் ஒரு பெரிய போட்டியே நிலவியதாகவும், விசாரணை அமைப்புகள் ஆட்சியில் இருந்தவர்களுக்கு ஆதரவாக இருந்ததால், ஊழல் செய்தவர்கள் அச்சம் கொள்ளவில்லை என பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதையும் படிக்க : கேரளாவில் ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ வைத்த சம்பவம் : ஒருவர் கைது

தொடர்ந்து 2014ஆம் ஆண்டிற்கு பிறகு தான் ஊழலின் காரணிகளையும், பதுக்கல்காரர்களையும் எதிர்த்து தீவிரமாக ஒரு மிஷன் போல செயல்பட்டதாக பிரதமர் மோடி கூறினார். மேலும் தற்போதும் ஊழல் செய்பவர்கள் சில மாநிலங்களில் அரசின் அங்கமாக உள்ளனர். ஆனால் நீங்கள் (சிபிஐ) உங்கள் பணியில் கவனம் செலுத்தி எந்த ஊழல்வாதியையும் தப்பிக்கவிடகூடாது என பிரதமர் மோடி தெரிவித்தார்.

top videos
    First published:

    Tags: CBI, PM Modi, PM Narendra Modi