வழக்கறிஞர் கதாபாத்திரத்தின் பவரை தெளிவாக காட்டிய திரைப்படம் ஜெய்பீம். அப்படத்தில் ஆதரவற்றவர்கள் நீதிக்காக ஏங்கும்போது அவர்களுக்காக குரல் கொடுத்து நியாயத்தின்பக்கம் நின்று வெற்றியை நிலைநாட்டும் வழக்கறிஞராக நடித்திருப்பார் சூர்யா. தமிழ்நாட்டில் நடந்த உண்மைக்கதைதான் ரீலில் வந்து ஜெய்பீமாக வெற்றியடைந்தது. அதேபோல ஒரு உண்மைக்கதையால் தற்போது வைரலாகி வருகிறார் ஒரு வழக்கறிஞர்.
சட்டப் போராட்டங்கள் பெரும்பாலும் நீண்ட மற்றும் செலவுமிக்க ஒன்றாக மாறுவதால், ஏழை வர்க்கம் நீதியின் மேலுள்ள நம்பிக்கையை கைவிடுகிறது. புகார்தாரர் நீதிமன்ற தேதிக்கும் வழக்கறிஞரின் விலையுயர்ந்த கட்டணத்திற்கும் இடையில் சிக்கித் தவிப்பதே தற்போது வழக்கமாகி விட்டது. வழக்கறிஞர்கள் மீதும் அதே பிம்பம் உங்கள் மனதில் உருவாகியிருக்க வேண்டும். ஆனால் தற்போது காசியாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒன்று பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது. அங்குள்ள வழக்கறிஞர் முகமது தாஹிர் ஹுசைன் ஏழைகளுக்கு இலவசமாக வாதாடி போராடுவதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு நிதியுதவியும் அளிக்கிறார்.
முகமது தாஹிர் உசேன் 1990-ல் தனது வழக்கறிஞர் பணியை தொடங்கினார். முதலில் பீகாரின் ரோஹ்தாஷில் தனது பயிற்சியைத் தொடங்கினார். அதன் பிறகு டெல்லி உயர் நீதிமன்றம், திஸ் ஹசாரி நீதிமன்றம் போன்றவற்றிலும் பணியாற்றினார். 2000-ஆம் ஆண்டு முதல், காசியாபாத்தில் பணிபுரிந்து வந்தார். 2012-ஆம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்றத்தில் சேர்ந்தார் தாஹிர்.
வழக்கறிஞராக மட்டுமல்லாமல், உச்ச நீதிமன்ற ஜெனரலின் ஆசிரியராகவும் தாஹிர் உள்ளார். உண்மையில், 2007 ஆம் ஆண்டில், அவர் தனது கரண்ட் அஃபர்ஸ் லா டைம்ஸ் (CALT) புத்தகத்தை எழுதினார். உச்ச நீதிமன்றம், அலகாபாத் உயர்நீதிமன்றம், லக்னோ பெஞ்ச், உத்தரகண்ட் நைனிடால் உயர்நீதிமன்றம், சண்டிகர் உயர்நீதிமன்றம் ஆகியவற்றின் புகழ்பெற்ற வழக்குகளின் சுருக்கம் இந்நூலில் எழுதப்பட்டுள்ளது.
”ஏழை மக்கள் இன்னும் நீதிமன்றத்தை கண்டு மிகவும் பயப்படுகிறார்கள். விருப்பமில்லாமல், நீதிக்கான போராட்டத்தை நடுவில் கைவிடுகிறார்கள். காரணம், வழக்கறிஞரின் நேரமும் அதிகக் கட்டணமும் தான். அதனால் தான் பணத்துக்காக எந்த ஒரு ஆதரவற்ற மனிதனும் சட்டப் போராட்டத்தை பாதியில் விட்டுவிடக் கூடாது என்று முயற்சி எடுக்கப்படுகிறது. அதனால் தான் அவர்களுக்கு இலவச அறிவுரைகளை மட்டும் வழங்காமல், அவர்களின் சார்பாக போராடுவதோடு, என்னால் முடிந்தளவு பண உதவியும் செய்கிறேன். நாங்கள் இதுவரை பலருக்கு உதவி செய்துள்ளோம், எதிர்காலத்திலும் இது தொடரும்” என தனது சேவை குறித்து கூறியுள்ளார் வழக்கறிஞர் தாஹிர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.