முகப்பு /செய்தி /இந்தியா / ரயில் நிலைய டிவிகளில் ஓடிய ஆபாச காட்சிகள்... அதிர்ச்சியில் பயணிகள், பரபரப்பு சம்பவம்!

ரயில் நிலைய டிவிகளில் ஓடிய ஆபாச காட்சிகள்... அதிர்ச்சியில் பயணிகள், பரபரப்பு சம்பவம்!

பாட்னா ரயில் நிலையம்

பாட்னா ரயில் நிலையம்

பீகார் ரயில்நிலையத்தில் உள்ள LED திரைகளில் திடீரென ஆபாச காட்சிகள் ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :
  • Bihar, India

பீகார் மாநில தலைநகர் பாட்னா ரயில் நிலையத்தில் அதிர்ச்சிக்குரிய சம்பவம் நேற்று அரங்கேறியுள்ளது. நேற்று காலை 9.30 மணி அளவில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கான பயணிகள் குழுமியிருந்தனர். அப்போது அங்கிருந்த LED அறிவிப்பு திரைகளில் ரயில்வே அறிவிப்புகள் மற்றும் விளம்பரங்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த நிலையில், திடீரென ஆபாச படத்தின் காட்சிகள் ஓடத் தொடங்கியுள்ளது.

சுமார் 3 நிமிடங்கள் இந்த ஆபாச காட்சிகள் திரைகளில் ஓடியுள்ளது. இந்த காட்சிகள் சத்தங்களை கேட்டு அங்கிருந்த பயணிகளும், ரயில்வே ஊழியர்களும் அதிர்ச்சி அடைந்தனர். பயணிகளுக்கு முகசுழிப்பை ஏற்படுத்தியது. சிலர் இதை செல்போன்களில் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்தனர். இதற்குள்ளாக ரயில்வே நிலைய போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் சென்றதை தொடர்ந்து திரை அணைக்கப்பட்டது.

top videos

    தொடர்ந்து சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த ரயில்வே போலீசார், சம்பவத்தப்பட்ட LED விளம்பர ஏஜென்சி மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது.மேலும், இதில் ஹைக்கர்களின் கைவரிசை இருக்குமோ என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. மக்கள் குழுமி இருக்கும் ரயில் நிலையத்தில் நிகழ்ந்த இச்சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    First published:

    Tags: Bihar, Railway Station, Viral Video