முகப்பு /செய்தி /இந்தியா / Video : திருப்பதி ஏழுமலையானை வழிபட்ட நடிகை ஜான்வி கபூர்

Video : திருப்பதி ஏழுமலையானை வழிபட்ட நடிகை ஜான்வி கபூர்

நடிகை ஜான்வி கபூர்

நடிகை ஜான்வி கபூர்

Tirupathi | நடிகை ஜான்விகபூர் திருப்பதி ஏழுமலையானை தரிசித்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • Last Updated :
  • Tirupati, India

நடிகை ஜான்வி கபூர்  பாரம்பரிய உடையான பாவாடை தாவணியில் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

இந்தி திரையுலகின் பிரபல நடிகையான மறைந்த ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். இவர் தடக் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், ஆந்திர பிரதேசத்தின் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் இன்று காலை திடீரென சாமி தரிசனம் செய்ய சென்றார்.

அவருடன், நடிகை ஸ்ரீதேவியின் இளைய மகள் மற்றும் ஜான்வி கபூரின் தங்கையான குஷி கபூரும் உடன் சென்றுள்ளார். அவர்கள் இருவரும் தென்னிந்திய பாரம்பரிய உடைகளான பாவாடை தாவணியில் வந்திருந்தனர். கோவிலில் பீடத்தின் முன் இருவரும் குனிந்து, தலை வணங்கி கும்பிட்டனர்.

இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

top videos

    செய்தியாளர்: புஷ்பராஜ், திருப்பதி.

    First published:

    Tags: Tirumala Tirupati, Tirupathi