படப்பிடிப்புக்காக மும்பை சென்றுள்ள ரஜினிகாந்த், வெள்ளிக்கிழமை வான்கடே மைதானத்தில் நடந்த இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டியை கண்டு களித்தார். தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் வீரர்கள் குல்தீப் யாதவ் உள்ளிட்டோரையும் சந்தித்து பேசினார்.
இந்நிலையில், மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சருமான உத்தவ் தாக்கரேவை, மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் ரஜினிகாந்த் சந்தித்தார். அப்போது, ரஜினியை உத்தவ் தாக்கரேவும் அவரது குடும்பத்தினரும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
An absolute delight to have Shri Rajnikant ji at Matoshri once again. pic.twitter.com/94MV7m0Rb9
— Aaditya Thackeray (@AUThackeray) March 18, 2023
இந்த சந்திப்பு குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், இது ரஜினியின் வழக்கமான சந்திப்பு என்றும், இதில் அரசியல் எதுவும் இல்லை எனவும் உத்தவ் தாக்கரேவின் மனைவி ராஷ்மி விளக்கம் அளித்துள்ளார். இந்த சந்திப்பின் போது, ஆதித்ய தாக்கரே, தேஜஸ் தாக்கரே ஆகியோரும் உடன் இருந்தனர்.
இந்நிலையில், மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த ரஜினி, செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகர்களுக்கு கையசைத்துவிட்டு காரில் ஏறி புறப்பட்டுச்சென்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mumbai, Rajinikanth, Uddhav Thackeray