முகப்பு /செய்தி /இந்தியா / 11,684 கோடியில் சொத்துகள், 160 வழக்குகள், ஐஎஸ்ஐ தொடர்பு: அஷ்ரப், ஆதிக் அகமதுவின் குற்ற அறிக்கை விபரம்!

11,684 கோடியில் சொத்துகள், 160 வழக்குகள், ஐஎஸ்ஐ தொடர்பு: அஷ்ரப், ஆதிக் அகமதுவின் குற்ற அறிக்கை விபரம்!

ஆதிக் அகமது

ஆதிக் அகமது

ஆயுதம் ஏந்திய போலீசார் கண் முன்னே துப்பாக்கியால் கொடூரமாக சுட்டுக் கொலை செய்யப்பட்ட ஆதிக் மீது 160 குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

  • Last Updated :
  • Uttar Pradesh, India

ஆதிக் அகமது- சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி. ஐந்து முறை எம்எல்ஏ, புல்பூர் நாடாளுமன்ற தொகுதியின் முன்னாள் எம்பி., சமாஜ்வாதி கட்சியின் தலைவராக முலாயம் சிங் யாதவ் இருந்த போது அக்கட்சியின் செல்வாக்கான தலைவராக இருந்தார்.

2005 ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் எம்எல்ஏ ராஜ்பால் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆதிக் அகமது, அவரது மனைவி சஷிதா பர்வீன், அவருடைய இரண்டு மகன்கள், தம்பி அஷ்ரஃப் ஆகியோர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர். அதன்பிறகு அரசியல்வாதியாக இருந்த ஆதிக் அகமது டானாக மாறத் தொடங்கினார். அகிலேஷ் யாதவ் தலைவராக வந்த பிறகு ஆதிக் கொஞ்சம் கொஞ்சமாக ஓரம் கட்டப்பட்டார்.

அதன்பிறகு பிரக்யாராஜின் தவிர்க்க முடியாத டானாக உருவானார் ஆதிக்  அகமது. உத்தரப்பிரதேச காவல்துறையின் தகவல் படி தற்போது வரை ஆதிக் மீது 160 கிரிமினல் வழக்குகள் உள்ளன. இவற்றில் 100 வழக்குகள் ஆதிக்கிற்கு எதிராகவும், 52 வழக்குகள் அவரது தம்பி அஷ்ரஃப்-ற்கு எதிராகவும், 3 வழக்குகள் அவரது மனைவி ஷசிதா பர்வீனுக்கு எதிராகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட இயக்கமான ஐஎஸ்ஐவுடன் தொடர்பிருப்பதாக கூறி குடும்ப மாஃபியாவான ஆதிக் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து சுமார் 11,684 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அமலாகக்த்துறை ஆதிக்கின் வீட்டில் சோதனை நடத்திய போது 200 வங்கி கணக்குகளின் ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். யோகி ஆதித்யாநாத் உத்தரப்பிரதேச முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு ஆதிக் அமகது குடும்பத்தின் மீதான நடவடிக்கைகள் இருகின. சட்டவிரோதமான அவரது தொழில்கள் முடக்கப்பட்டன. அவரின் வழக்குகள் மீதான வழக்கு விசாரணை துரிதப்பத்தப்பட்டன. ரியல் எஸ்டேட் தொடர்பான கட்டப்பஞ்சாயத்துகள் முடக்கப்பட்டன. ஆட்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வநத ஆதிக்கின் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால் அவரின் பெரும்பாலான குற்ற நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இப்போது அவர் மர்ம நபர்களால் கொடூரமாக சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: பிரபல தாதா சுட்டுக் கொலை... செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது கும்பல் வெறிச்செயல்... உ.பியில் பயங்கரம்!

கடந்த பிப்ரவரி மாதம் ராஜ்பால்-ன் வழக்கறிஞர் உமேஷ் பால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் ஆதிக்கின் மகன் ஆசாத் மற்றும் ஆதிக்கின் நெருங்கிய உதவியாளர் குலாம் ஆகியோடு ஈடுபட்டது தெரியவந்ததும் அவர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

top videos

    இதையடுத்து கடந்த வியாழக் கிழமை ஆசாத் மற்றும் குலாம் ஆகியோரை போலீசார் ஜான்சியில் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். கடந்த 58 மணி நேரத்தில் அதிக், அவரது மகன் ஆசாத் மற்றும் சகோதரர் அஷ்ரப் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆதிக்கின் மனைவி ஷாயிஸ்தா தலைமறைவாக உள்ளார். மைத்துனர் அக்லக் மற்றும் அதிக் ஆகியோரின் இரண்டு மகன்கள் சிறையிலும், இரண்டு மைனர் மகன்கள் சிறார் இல்லத்திலும் உள்ளனர்.

    First published:

    Tags: Uttar pradesh