முகப்பு /செய்தி /இந்தியா / மீண்டும் மக்களவையில் என்ட்ரி... ஆம் ஆத்மி பிடிக்குச் சென்ற 24 ஆண்டு கால காங்கிரஸ் கோட்டை

மீண்டும் மக்களவையில் என்ட்ரி... ஆம் ஆத்மி பிடிக்குச் சென்ற 24 ஆண்டு கால காங்கிரஸ் கோட்டை

ஜலந்தர் இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி

ஜலந்தர் இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி

24 ஆண்டுகள் காங்கிரஸ் கோட்டையாக இருந்த ஜலந்தர் தொகுதி தற்போது ஆம் ஆத்மியின் பிடிக்கு சென்றுள்ளது.

  • Last Updated :
  • Punjab, India

கர்நாடக மாநிலச் சட்டப்பேரவை தேர்தலுடன் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்ற நிலையில், மாநிலத்தை ஆளும் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.

முன்னதாக இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. அக்கட்சியின் சந்தோக் சிங் சவுத்ரி எம்பியாக இருந்தார். பஞ்சாப் மாநிலத்தில் கடந்த ஜனவரி 14ஆம் தேதி ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்ட போது அதில் சந்தோக் சிங் பங்கேற்றார். நடைபயணத்தின் போது திடீரென மயங்கி விழுந்த அவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

சந்தோக் சிங் மறைவால் தொகுதி காலியனதாக அறிவித்த தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்தது. இந்த தேர்தல் ஆம் ஆத்மி, காங்கிரஸ், சிரோமனி அகாலி தளம், பாஜக என நான்கு முனை போட்டியாக அமைந்தது. இதில் மாநிலத்தை ஆளும் ஆம் ஆத்மி சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் சுஷில் குமார் ரிங்கு 58,947 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

காங்கிரஸ் சார்பில் களமிறங்கிய சந்தோக் சிங்கின் மனைவி கரம்ஜித் கவுர் இரண்டாவது இடம் பிடித்தார். சிரோமனி அகாலி தளம் வேட்பாளர் 3ஆவது இடத்தையும், பாஜக வேட்பாளர் 4 இடத்தையும் பிடித்தனர். இந்த வெற்றியின் மூலம் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் மக்களவையில் இடம்பிடித்துள்ளது.

இதையும் படிங்க: தேர்தல் வெற்றி கொண்டாட்டத்துக்கு மத்தியில் சித்தராமையா குடும்பத்தில் சோக நிகழ்வு

2019 மக்களவைத் தேர்தலில் சங்க்ரூர் என்ற ஒரு மக்களவை தொகுதியில் மட்டுமே ஆம் ஆத்மி வெற்றி பெற்ற நிலையில், அந்த தொகுதியின் வெற்றி வேட்பாளரான பகவந்த் மான் கடந்தாண்டு பஞ்சாப் முதலமைச்சரனார்.

top videos

    இதைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து இரு மாநிலங்களில் ஆட்சி இருக்கும் ஆம் ஆத்மி கட்சி மக்களவையில் ஒரு உறுப்பினர் கூட இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டது. இப்படி இருக்க, ஜலந்தர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் மக்களவைக்குள் நுழைகிறது ஆம் ஆத்மி கட்சி. இதன் மூலம் 24 ஆண்டுகள் காங்கிரஸ் கோட்டையாக இருந்த ஜலந்தர் தொகுதி தற்போது ஆம் ஆத்மி பிடிக்கு சென்றுள்ளது.

    First published:

    Tags: Aam Aadmi Party, Lok sabha, Punjab