முகப்பு /செய்தி /இந்தியா / ஒரு ரயில் டிக்கெட் விலை ரூ.10 லட்சம்.. அப்படி என்ன வசதிகள் உள்ளன தெரியுமா?

ஒரு ரயில் டிக்கெட் விலை ரூ.10 லட்சம்.. அப்படி என்ன வசதிகள் உள்ளன தெரியுமா?

விலை உயர்ந்த ரயில் கட்டணம்

விலை உயர்ந்த ரயில் கட்டணம்

இந்தியாவில் ஒரு ரயில் டிக்கெட்டின் விலை 10 லட்சம் ரூபாய் என்றால் நம்ப முடிகிறதா? வாருங்கள், இந்த ரயில்கள் குறித்த ஒரு சுவாரஸ்ய தொகுப்பை பார்க்கலாம்.

  • Last Updated :
  • Delhi, India

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்த்து பிரமிக்கும் ஒரு அதிசயம் என்றால் அது ரயில் என்று கூறலாம். உங்கள் வயது மற்றும் அனுபவத்தைப் பொறுத்து ரயில் பற்றிய கண்ணோட்டம் மாறுபடலாம். ரயில் என்றவுடன் சிலருக்கு அலைபாயுதே படத்தின் காதல் காட்சிகளும் இதமான நினைவுகளும் மனதில் அலைபாயலாம்.

ஒரு சிலருக்கோ தன் காதலியை தேடிச் சென்ற கற்றது தமிழ் திரைப்படத்தின் ஜீவாவும், நா.முத்துக்குமாரின் வரிகளும் நினைவுக்கு வரலாம். வழிப்போக்கர்களை நம் நண்பர்களாக மாற்றும் வல்லமை கொண்ட ரயில் பயணம் எண்ணற்ற அனுபவங்களைத் தரும். அந்த அனுபவங்கள் அந்நியன் படத்தின் இந்த காட்சிகளை போலவும் இருக்கலாம்.

இந்திய போக்குவரத்தின் முதுகெலும்பாக பார்க்கப்படக் கூடிய ரயில்வே துறையில் சொகுசு ரயில்களுக்கும் பஞ்சமே இல்லை. நட்சத்திர விடுதிகளுக்கு நிகரான அறைகள், இயற்கை காட்சிகளை ரசிக்க விசாலமான கண்ணாடிகள், ருசித்து சாப்பிட வகை வகையான உணவுகள் என பார்த்து பார்த்து வியக்கும் அளவுக்கு சொகுசு வசதிகள் கொண்ட பல சுற்றுலா ரயில்கள் இந்தியாவில் இயங்குகின்றன. அவற்றில் முக்கியமான ஒன்று PALACE ON WHEELS. இதில், 8 முதல் 13 நாட்கள் வரை பயணம் அழைத்துச் செல்லப்படுகிறது.

இதையும் படிக்க : 62 வயது பெண்ணுடன் 32 வயது இளைஞன் உல்லாசம்... மோசடியில் முடிந்த காதல் கதை..!

இந்த சொகுசு சுற்றுலா ரயிலில் செல்ல 1 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. டெல்லி, ஜெய்பூர், உதய்பூர், ஸ்வாய் மோத்பூர், சித்தூர்கர், ஜெய்சால்மர், ஜோத்பூர், பாரத்பூர், ஆக்ரா, வழியாக மீண்டும் டெல்லியை வந்தடைகிறது. அரண்மனையில் இருக்கும் அனுபவத்தை தரக்கூடிய இந்த ரயில் பெரும்பாலும் ராஜஸ்தான் மாநிலத்தில் பயணிக்கிறது.

அடுத்ததாக டெக்கான் ஒடிஸ்ஸி ரயில் பல வழித்தடங்களில் பயணிக்கிறது. மும்பை, உதய்பூர், ரன்தம்போர், ஜெய்பூர், ஆக்ரா வழியாக டெல்லியை வந்தடையும். 7 இரவு, 8 பகல் என பயணிக்கக் கூடிய இந்த ரயிலில் டிக்கெட் கட்டணமாக 3 லட்சம் ரூபாய் முதல் 8 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. இது, மகாராஷ்டிர மாநில சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் இயக்கப்படுகிறது. அதேபோல 8 பகல், 7 இரவு பயணிக்கும் டெல்லி, ஜோத்பூர், உதய்பூர், சித்தூரகர்,சவாய் மோத்பூர், ஜெய்பூர், கஜுராஹோ, வாரணாசி, ஆக்ரா வழியாக மீண்டும் டெல்லியை அடையும் பயணத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் முதல் 80 ஆயிரம் வரை வசூல் செய்யப்படுகிறது.

இதேபோல், மகாராஜா எக்ஸ்பிரஸில் நாம் தேர்ந்தெடுக்கும் வழித்தடத்தைப் பொறுத்து கட்டணம் பெறப்படுகிறது. உத்தேசமாக 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் முதல் 10 லட்சம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் தாஜ்மஹால், கஜூராஹோ கோயில், ரந்தம்பூர், பதேபூர் சிக்ரி, வாரணாசி உள்ளிட்ட நாட்டின் முக்கிய சுற்றுலா தலங்களுக்கு பயணிகளை அழைத்துச் செல்கிறது.

8 பகல், 7 இரவு பயணிக்கும் கோல்டன் சேரியட் ரயில் தென் மாநிலங்களின் முக்கிய சுற்றுலா தலங்களுக்கு பயணிகளை அழைத்து செல்கிறது. இரண்டு வழித்தடங்கள் இருக்கும் நிலையில் ஒரு வழித்தடம் சென்னை, மாமல்லபுரம், புதுச்சேரி, திருச்சி, தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட பகுதிகளின் அழகை எடுத்துரைக்கும் வகையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Special Facts, Special trains, Tamil News, Train, Train ticket