முகப்பு /செய்தி /இந்தியா / கேரளா செல்லும் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்: பரபரப்பை கிளப்பிய கடிதம்...

கேரளா செல்லும் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்: பரபரப்பை கிளப்பிய கடிதம்...

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

Kerala PM Modi Visit | இந்த சூழலில் மிரட்டல் கடிதம் மற்றும் உளவுத்துறை தகவல்கள் ஊடகங்களில் கசிந்தது எப்படி என்பது குறித்தும் கேரள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Last Updated :
  • Kerala, India

பிரதமர் நரேந்திர மோடி நாளை கேரளா செல்ல உள்ள நிலையில் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து பாஜக அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் செல்லும் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இரு நாள் பயணமாக நாளை கேரளா செல்கிறார். இந்த நிலையில் அம்மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர் சுரேந்திரனின் அலுவலகத்துக்கு கடந்தவாரம் மலையாளத்தில் கடிதம் ஒன்று வந்தது.

அந்த கடிதத்தை எழுதியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் மிரட்டல் கடிதம் மற்றும் உளவுத்துறை தகவல்கள் ஊடகங்களில் கசிந்தது எப்படி என்பது குறித்தும் கேரள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பிரதமர் மோடி மீதான இந்த பாசமே பாஜகவின் பலம்” - வீடியோ வெளியிட்டு அமித்ஷா பெருமிதம்!

உளவுத்துறை தகவல்கள், பாதுகாப்பு பணியில் இருக்கும் அதிகாரிகள் குறித்த தகவல்கள் எப்படி ஊடகங்களில் கசிந்தது என்பது குறித்து மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் விளக்கமளிக்க வேண்டும் என்றும் பாஜகவினர் வலியுறுத்தியுள்ளனர். இந்த விவகாரத்தில் என்.ஜெ. ஜானி என்பவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். ஆனால் கடிதத்தை தாம் எழுதவில்லை என்று ஜானி மறுத்துள்ளார்.

First published:

Tags: Kerala, PM Modi