மகாராஷ்டிராவில் விபத்தில் கால் எலும்பு முறிவு ஏற்பட்டபோதும், ஆம்புலன்சில் படுத்தபடியே மாணவி ஒருவர் தேர்வில் பங்கேற்று பலரையும் வியக்க வைத்துள்ளார்.
10ஆம் வகுப்பு படித்து வரும் முபாஷிரா சையத் என்ற அந்த மாணவி, கடந்த வெள்ளிக்கிழமை தேர்வு முடித்துவிட்டு வீடு திரும்புகையில் சாலையை கடக்க முயற்சி செய்தார். அப்போது கார் ஒன்று முபாஷிராவின் இடது கால் மீது ஏறி இறங்கியது.இதில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், இரண்டுவாரம் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை நடந்த தேர்வில் பங்கேற்க விரும்பிய மாணவிக்கு பிரத்யேகமாக ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆம்புலன்சில் படுத்தபடியே மாணவி பதில் கூற, உதவியாளர் ஒருவர் தேர்வை எழுதினார். படிப்பு மீது மாணவிக்கு இருந்த தீராத ஆசை காண்போரை பாராட்ட வைத்து வருகிறது. எதிர்காலத்தில் ஆசிரியையாக விரும்புவதாகவும் விபத்தில் சிக்கிய மாணவி முபாஷிரா தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Maharashtra, Public exams