முகப்பு /செய்தி /இந்தியா / மணிப்பூரில் மீண்டும் வெடித்த கலவரம் : மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமல்

மணிப்பூரில் மீண்டும் வெடித்த கலவரம் : மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமல்

மாதிரி படம்

மாதிரி படம்

மணிப்பூரில் மீண்டும் கலவரம் வெடித்த நிலையில், ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Manipur, India

மணிப்பூரில் மீண்டும் கலவரம் வெடித்த நிலையில், ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இரண்டு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல், கலவரமாக வெடித்தது. இதில், சுமார் 60 பேர் உயிரிழந்த நிலையில், ஏராளமான பொருட்கள் தீக்கிரையாயின. துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டு கலவரம் கட்டுப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், இம்பால் அருகே உள்ள லாம்புலனஸ் நகரில் மீண்டும் கலவரக்காரர்கள் வீடுகளுக்கு தீ வைத்தனர்.  தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதையும் படிங்க: மண்ணிலே ஈரமுண்டு.. இலவசமாக வாதாடும் வழக்கறிஞர்.. நிஜத்தில் ஒரு ஜெய்பீம் கதை!

மீண்டும் கலவரக்காரர்கள் களம் இறங்கியுள்ளதால், துணை ராணுவப்படைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பதற்றத்தை தணிக்கும் பொருட்டு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Manipur