முகப்பு /செய்தி /இந்தியா / “அப்பா தினமும் குடித்துவிட்டு வந்து அம்மாவை அடிக்கிறார்” - போலீசில் புகாரளித்த 9 வயது சிறுவன்..!

“அப்பா தினமும் குடித்துவிட்டு வந்து அம்மாவை அடிக்கிறார்” - போலீசில் புகாரளித்த 9 வயது சிறுவன்..!

போலீசில் புகார் அளித்த 9 வயது சிறுவன்

போலீசில் புகார் அளித்த 9 வயது சிறுவன்

தினமும் குடித்துவிட்டு வந்து அடிப்பதாக தனது தந்தை மீது 9 வயது சிறுவன் காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

  • Last Updated :
  • Andhra Pradesh, India

அம்மாவை அப்பா தினமும் குடித்துவிட்டு வந்து அடிப்பதாக 9 வயது சிறுவன் ஒருவன் போலீசில் புகார் அளித்துள்ளான்.

ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் உள்ள கர்ரப்பள்ளம் மண்டலம் இஸ்லாம் பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சுபானி. இவர் அப்பகுதியில் உள்ள ரைஸ் மில் ஒன்றில் வேலைப்பார்த்து வருகிறார். இவருக்குத் திருமணமாகி சுபாம்பி என்ற மனைவியும், 9 வயதில் ரஹிம் என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில், தினமும் சுபானி குடித்துவிட்டு மனைவியைப் போட்டு அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளார். இதனைத் தினமும் கண்ட மகன், அப்பா செய்வதை சகித்துக்கொள்ள முடியாமல் புகார் அளிக்கக் காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளான்.

காவல் நிலையத்தில் எஸ்.ஐயிடம், தன் அம்மாவை அப்பா தினமும் குடித்துவிட்டு அடிப்பதாக வாய்மொழியாகப் புகார் அளித்துள்ளான். மேலும், தன் அம்மா அடிக்க வேண்டாம் என்று கெஞ்சி கேட்டாலும், அப்பா கேட்காமல் அடிப்பதாகத் தெரிவித்துள்ளான். எனவே, அப்பா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளான்.

Also Read : தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவைத் திரும்பப் பெற்ற சரத் பவார்... தொண்டர்கள் மகிழ்ச்சி

இதனைத்தொடர்ந்து, எஸ்.ஐ உடனடியாக சிறுவனின் பெற்றோரை வரவழைத்து அறிவுரை கூறியும், சுபானியை கடுமையாக எச்சரித்தும் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

top videos

    செய்தியாளர் - புஷ்பராஜ்

    First published:

    Tags: Andhra Pradesh, Boy