முகப்பு /செய்தி /இந்தியா / ரூ.1 கோடி ஜீவனாம்சம் கேட்ட இரண்டாம் மனைவியை கூலிப்படை வைத்து கொன்ற கணவர்.. பகீர் சம்பவம்

ரூ.1 கோடி ஜீவனாம்சம் கேட்ட இரண்டாம் மனைவியை கூலிப்படை வைத்து கொன்ற கணவர்.. பகீர் சம்பவம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ஒரு கோடி ரூபாய் ஜீவனாம்சம் கேட்ட மனைவியை கணவர் கூலிப்படையை ஏவி கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் டெல்லியில் நடைபெற்றுள்ளது.

  • Last Updated :
  • Delhi, India

டெல்லி ரஜோரி கார்டன் பகுதியில் வசிக்கும் 71 வயது நபர் எஸ்கே குப்தா. இவருக்கு அமித் குப்தா 45 வயது மகன் இருக்கிறார். மகன் அமித் குப்தா மூளை பக்கவாதத்தில் பாதிக்கப்பட்ட நபர். எனவே, இவர் இயல்பாக நடமாட முடியாத மாற்றுத் திறனாளி.

குப்தாவின் மனைவி உயிரிழந்த நிலையில், தனது மகனை எதிர்காலத்தில் நன்கு பார்த்துக்கொள்ள ஒரு நபர் வேண்டும் என யோசித்து 71 வயதில் இரண்டாம் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார். அதன்படி, பூஜா என்ற 35 வயது பெண்ணை கடந்தாண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்தார் 71 வயதான எஸ்கே குப்தா.

ஆனால், எஸ்கே குப்தா எதிர்பார்த்தபடி இரண்டாவது திருமணம் செல்லவில்லை. மாற்றுத்திறனாளி மகனை புதிய மனைவி பூஜா பேணி பார்த்துக் கொள்ள சம்மதிக்கவில்லை. எனவே, திருமணமான சில மாதங்களிலேயே இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்ய குப்தா முடிவெடுத்தார். தன்னை விவகாரத்து செய்தால் 1 கோடி ரூபாய் ஜீவனாம்சம் தர வேண்டும் என பூஜா தடாலடியாக கூறியுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த குப்தா அவரது மகன் அமித் ஆகிய இருவரும், பூஜாவை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி, தனது வீட்டில் உதவி வேலை செய்யும் விபின் சேத்தி என்பவரை குப்தா அனுகியுள்ளார். அவர் தனது நண்பர் ஹிமான்ஷு என்பவரையும் சதித்திட்டத்தில் சேர்த்துக்கொண்டார். இவர்கள் கடந்த புதன்கிழமை அன்று நண்பகல் பூஜா வீட்டில் இருப்பதை அறிந்து கொண்டு விபின் சேத்தியும், ஹிமான்ஷுவும் உள்ளே நுழைந்துள்ளார்.

விபின் ஏற்கனவே அறிமுகமானவர் என்ற நம்பிக்கையில் அவரை பூஜா அனுமதித்துள்ளார். அப்போது அந்த இருவரும் தங்களிடம் இருந்த கத்தியால் பூஜாவை பல முறை குத்தி கொலை செய்தனர். இந்த சம்பவத்தின் போது மகன் அமித் வீட்டில் தான் இருந்துள்ளார். பின்னர் அங்கு திருட்டு சம்பவம் நடந்தது போல ஜாமான்களை சிதறவிட்டனர்.

இதையும் படிங்க: மனைவியின் அந்தரங்க படங்களை பகிர்ந்த கணவன்... கேட்ட வரதட்சணையை தராததால் ஆத்திரம்...!

top videos

    பூஜா கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்டதாக குப்தா போலீசிடம் புகார் அளித்துள்ளார். ஆனால், தடயங்களை கைப்பற்றி சோசித்த போது காவல்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதன்பேரில் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் குப்தா உண்மையை ஒப்புக்கொண்டார். அதன்பேரில், கொலைக்கு சூத்திரதாரிகளான எஸ்கே குப்தா அவரது மகன் அமித் மற்றும் கொலைையாளிகள் இருவர் என 4 பேரையும் காவல்துறை கைது செய்தனர்.

    First published:

    Tags: Crime News, Delhi, Husband Wife, Muder