முகப்பு /செய்தி /இந்தியா / மருத்துவர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை - அதிரடியான சட்டத்தை கொண்டுவந்த அரசு

மருத்துவர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை - அதிரடியான சட்டத்தை கொண்டுவந்த அரசு

கேரளா மருத்துவர்கள் போராட்டம்

கேரளா மருத்துவர்கள் போராட்டம்

Kerala Doctors Attack | மருத்துவமனைகளை தாக்கினால், சேதம் அடைந்த பொருளின் மதிப்பை விட மும்மடங்கு அபராதம் விதிக்கப்படும்

  • Last Updated :
  • Kerala, India

கேரளாவில் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் வகையில் அம்மாநில அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது.

கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் கடந்த வாரம் கைதிக்கு சிகிச்சை அளித்த பெண் மருத்துவர் கத்திரிக்கோலால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து எர்ணாகுளத்தில் மருத்துவர் மீது நோயாளி ஒருவர் தாக்குல் நடத்தினார். இதனிடையே மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில், 2012 ஆம் ஆண்டு மருத்துவ பணியாளர்களுக்கான பாதுகாப்பு சட்டத்தில் அம்மாநில அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது.

அதன் படி மருத்துவர் மீது தாக்குதல் நடத்தியதாக புகார் அளிக்கப்பட்டால், ஒரு மணிநேரத்திற்குள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் காவல் ஆய்வாளர் அல்லது அதற்கு மேல் பொறுப்பில் உள்ள காவலர்கள் மட்டுமே வழக்கை விசாரிக்க வேண்டும் என்றும், 60 நாட்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:  ஐயா எல்லா டீம் கூடவும் விளையாடிட்டு, அவருக்கு புடிச்ச டீமை தான் ப்ளேஆஃப் அனுப்புவாரு... இணையத்தில் வைரலாகும் ஐபிஎல் மீம்ஸ்

மருத்துவர்கள் மீதான தாக்குதலை விரைவு நீதிமன்றங்கள் விசாரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்கும் வகையில், சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவை மட்டுமின்றி மருத்துவமனைகளை தாக்கினால், சேதம் அடைந்த பொருளின் மதிப்பை விட மும்மடங்கு அபராதம் விதிக்கப்படும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

First published:

Tags: Chief Minister Pinarayi Vijayan, Kerala government