முகப்பு /செய்தி /இந்தியா / 6ஜி சேவைகளுக்கான சோதனைகளை இந்தியா தொடங்கியுள்ளது : பிரதமர் மோடி

6ஜி சேவைகளுக்கான சோதனைகளை இந்தியா தொடங்கியுள்ளது : பிரதமர் மோடி

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

120 நாட்களுக்குள் 125 நகரங்களில் 5ஜி சேவை கிடைத்துள்ளதாகவும், 100க்கும் மேற்பட்ட 5ஜி ஆய்வகங்கள் இந்தியாவில் வரும் ஆண்டுகளில் துவங்கப்படும் என்றும் மோடி கூறியுள்ளார்

  • Last Updated :

6ஜி தொலைதொடர்பு சேவைகளுக்கான சோதனைகள் இந்தியாவில் தொடங்கியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் புதிய சர்வதேச தொலைத்தொடர்பு அலுவலகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். பாரத் 6ஜி தொலைநோக்கு ஆவணம் (Bharat 6G Vision Document)மற்றும் 6ஜி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சோதனைத் தளத்தையும் (6G R&D Test Bed) தொடங்கி வைத்தார்.

பின்னர் பேசிய பிரதமர் மோடி, மாதந்தோறும் 800 கோடி UPI பரிவர்த்தனைகள் இந்தியாவில் நடைபெறுவதாக பெருமிதம் தெரிவித்தார். 28 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தொகை மக்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்க: தமிழ்நாட்டைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர்களுக்கு பத்மஸ்ரீ விருது... குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்!

இந்தியாவில் தொலை தொடர்பு துறை என்பது ஆற்றல் துறையாக இல்லாமல் அதிகாரம் அளிக்கும் துறையாக உள்ளதாக கூறியுள்ளார். 120 நாட்களுக்குள் 125 நகரங்களில் 5ஜி சேவை கிடைத்துள்ளதாகவும், 100க்கும் மேற்பட்ட 5ஜி ஆய்வகங்கள் இந்தியாவில் வரும் ஆண்டுகளில் துவங்கப்படும் என்றும் மோடி கூறியுள்ளார்.

top videos

    மேலும்,6ஜி அலைவரிசை சேவைக்குறித்து இந்தியா விவாதித்து வருவதாகவும், அடுத்த சில ஆண்டுகளில் 6ஜி அலைவரிசை சேவையை அமல்படுத்த, இன்றையக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் முக்கிய பங்காற்றும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.  2030-க்குள் 6ஜி சேவையை முழுமையாக செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    First published:

    Tags: Modi, PM Modi