முகப்பு /செய்தி /இந்தியா / கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் மரணம்... விஷவாயு தாக்கியதால் நேர்ந்த சோகம்

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் மரணம்... விஷவாயு தாக்கியதால் நேர்ந்த சோகம்

கழிவுநீர் தொட்டி மரணம்

கழிவுநீர் தொட்டி மரணம்

கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் மகாராஷ்டிராவில் நிகழ்ந்துள்ளது.

  • Last Updated :
  • Maharashtra, India

செப்டிக் டேங்க் எனப்படும் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் போது விஷ வாயு தாக்கி தொழிலாளர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் முடிவற்ற தொடர்கதைகளாக நிகழ்ந்து வருகின்றன. அத்தகைய அதிர்ச்சி சம்பவம் ஒன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று நடைபெற்றுள்ளது.

அம்மாநிலத்தின் பர்பானி மாவட்டத்தில் உள்ள பௌச்சா தாண்டா பகுதியில் உள்ள பண்ணை ஒன்றில் அமைந்துள்ள கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய ஆறு தொழிலாளர்கள் அதற்குள் இறங்கியுள்ளனர். அவர்கள் சுத்தம் செய்யும் போது அதில் இருந்து விஷவாயு வெளியேறிய நிலையில், அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அதில் 5 பேர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஒரு தொழிலாளர் மட்டும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார். உயிரிழந்தவர்கள் சாதிக் ஷேக், ஷாருக், ஜுனைத் தாதவுத், சபீர், பெரோஸ் காபர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: தேர்தல் வெற்றி கொண்டாட்டத்துக்கு மத்தியில் சித்தராமையா குடும்பத்தில் சோக நிகழ்வு

இவர்கள் அனைவருமே ஒருவருக்கு ஒருவர் உறவினர்கள் ஆவர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சோன்பேத் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. 2019 தொடங்கி 2022 ஜூலை வரையிலான காலகட்டத்தில் மட்டும் கழிவு தொட்டி சுத்தம் செய்யும் போது 188 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக மக்களவையில் அரசு தெரிவித்துள்ளது.

top videos
    First published:

    Tags: Maharashtra