இந்தியாவில் நக்சல் இயக்கங்கள் அதிகம் செயல்படும் மாநிலங்களில் ஒன்று ஜார்கண்ட். அங்கு நக்சல் நடமாட்டமுள்ள பகுதிகளில் காவல்துறையினர் தொடர் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில், சத்ரா என்ற பகுதிகளில் நக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ளதாக போலீசாருக்கு துப்பு கிடைத்துள்ளது.
இதையடுத்து தனிப்படை அப்பகுதிக்கு விரைந்த நடத்திய சோதனையில் நக்சல் இயக்கத்தை சேர்ந்தவர்கள் சுற்றி வளைக்கப்பட்டனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 5 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், 3 நக்சல்கள் கைது செய்யப்பட்டனர். உயிரிழந்த நக்சல்கள் கவுதம் பாஸ்வான், சார்லி, நந்து, அமர் கஞ்சு, சஞ்சீவ் பூயான என அடையாளம் காணப்பட்டனர்.
இவர்கள் ஏற்கனவே காவல்துறையினரால் தேடப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. மேலும், இரண்டு ஏகே 47 ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ரூ.27 லட்சம் பணம் ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: ராமநவமி வன்முறை சம்பவம் தொடர்பாக 77 பேர் கைது.. பீகாரில் உஷார் நிலை
மேலும், கைதான சுமன் சிங், சஞ்சய் குமார் மற்றும் பராசரம் என்று மூன்று நக்சல்களிடம் போலீசார் தீவிர விசரணை நடத்தி வருகின்றனர். இந்த மூவரும் அப்பகுதிகளில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அப்பகுதியில் கட்டுமான தொழிலை சீர்குலைக்கும் விதத்தில் தீவைப்பு சம்பவங்களில் இவர்கள் ஈடுபட்டதாக காவல்துறை எஸ்பி சலபா சின்ஹா தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.