முகப்பு /செய்தி /இந்தியா / ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்... 5 ராணுவ வீரர்கள் வீர மரணம்..!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்... 5 ராணுவ வீரர்கள் வீர மரணம்..!

பயங்கரவாத தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் மரணம்

பயங்கரவாத தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் மரணம்

Terror Attack | தேடுதல் வேட்டையின் போது பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர்.

  • Last Updated :
  • Jammu and Kashmir, India

ஜம்மு காஷ்மீரில் உளவுத் துறை தகவலின் பேரில் காவல்துறையினர், ராணுவத்துடன் இணைந்து அதிரடி சோதனைகளில் ஈடுபடுவது வழக்கம். அப்படி சமீபத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர்கள் தொடர்பாக ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் இன்று ரஜோரி பகுதியில் ராணுவத்தினர் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

பயங்கரவாதிகள் இருந்த இடத்தை ராணுவத்தினர் நெருங்கிய நிலையில், இரு தரப்புக்கும் மோதல் வெடித்தது. அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் வெடிகுண்டு வீசி திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் சம்பவ இடத்தியேலே 2 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். படுகாயம் அடைந்த மேலும் 4 பேரை உதம்பூரில் உள்ள ராணுவ மருத்துமனைக்கு கொண்டு சேர்த்தனர்.

அந்த  மூன்று வீரர்கள் சிகிச்சை பலனின்றி வீர மரணமடைந்தனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. படுகாயங்களுடன்  ஒரு ராணுவ வீரர்  சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையும் படிங்க: ஹனி டிராப் வலை.. . பாக் ஏஜென்டுக்கு வீடியோ காலில் ரகசிய தகவல் - டிஆர்டிஓ விஞ்ஞானி கைது

top videos

    இந்த அசம்பாவிதத்திற்கு பின்னரும் தேடுதல் வேட்டை தொடர்வதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அடர்ந்த காடுகளிலுள்ள பாறைப் பகுதியில் தீவிரவாதிகள் மறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சம்பவ இடத்திற்கு ஜம்மு காஷ்மீர் டிஜிபி தில்பக் சிங் மற்றும் ஏடிஜிபி முகேஷ் சிங் விரைந்துள்ளனர்.

    First published:

    Tags: Army, Army Man Killed, Jammu and Kashmir, Terror Attack