முகப்பு /செய்தி /இந்தியா / இந்தியாவில் குறைந்த கட்டணத்தில் இணையச் சேவை... பிரதமர் மோடி பெருமிதம்..!

இந்தியாவில் குறைந்த கட்டணத்தில் இணையச் சேவை... பிரதமர் மோடி பெருமிதம்..!

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

டெல்லியில் நடைபெற்ற 16வது குடிமைப்பணிகள் தின விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார்.

  • Last Updated :
  • New Delhi, India

போலி சான்றுகள் மூலம் பெறப்பட்ட 4 கோடி சமையல் எரிவாயு இணைப்புகளைக் கண்டறிந்து ஒழித்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற 16வது குடிமைப் பணிகள் தின விழாவில் பேசிய பிரதமர் மோடி, புதிய இந்தியாவின் வேகமான வளர்ச்சிக்குக் குடிமைப் பணியாளர்கள் முக்கிய பங்காற்றுவதாகக் கூறினார். கொரோனா நெருக்கடி இருந்தபோதும், உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயர்ந்துள்ளது எனவும், டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

குறைந்த கட்டணத்தில் இணையச் சேவை கிடைக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என கூறிய பிரதமர், நாட்டின் கிராமப் பொருளாதாரம் மாறி வருவதாகத் தெரிவித்தார்.

Also Read : நீதிமன்றத்தில் புகுந்து மனைவி மீது சராமாரியாக துப்பாக்கிச் சூடு... கணவர் வெறிச்செயல்..!

போலியான சான்றுகள் கொடுத்துப் பெற்ற 4 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் மற்றும் 4 கோடி ரேசன் கார்டுகளை ஒழித்துள்ளதாகவும், சிறுபான்மையினருக்கான உதவித்தொகை பெறத் தகுதியில்லாத 30 லட்சம் பேரைக் கண்டறிந்து நீக்கியதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

First published:

Tags: Delhi, PM Modi