முகப்பு /செய்தி /இந்தியா / "பாம்புனா மட்டும் பயந்துருவோமா...” - பாம்பை கடித்து கொன்ற 3 வயது சிறுவன்! - உபி-யில் பகீர் சம்பவம்!

"பாம்புனா மட்டும் பயந்துருவோமா...” - பாம்பை கடித்து கொன்ற 3 வயது சிறுவன்! - உபி-யில் பகீர் சம்பவம்!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 வயது சிறுவன்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 வயது சிறுவன்

ஆம் நீங்கள் கேட்டது சரிதான் பாம்பு கடித்து சிறுவன் உயிரிழக்கவில்லை. மாறாக சுட்டிச் சிறுவன்தான் பாம்பை கடித்துக் கொன்றிருக்கிறார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Uttar Pradesh, India

உத்தரபிரதேசத்தில் 3 வயது சிறுவன் கடித்து குட்டி பாம்பு இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஃபரூக்காபாத் மாவட்டத்தில் உள்ள மத்னாபூர் கிராமத்தில் முகமதாபாத் என்ற பகுதியில் தினேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். அவரின் மூன்று வயது சிறுவன் அக்சய் வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக வந்த குட்டி பாம்பை சிறுவன் விளையாட்டாக எடுத்து கடித்துள்ளார். இதில் பாம்பு பரிதாபமாக உயிரிழந்தது. இதனை கண்ட அக்சயின் பாட்டி, உடனடியாக சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இறந்த பாம்பையும் பாட்டி உடன் எடுத்துச்சென்று மருத்துவர்களிடம் காட்டினார். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவனுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அறிவித்ததுடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

First published:

Tags: Uttar pradesh