மத்தியப் பிரதேசத்தில் கோயில் கிணற்றின் மேல் பரப்பில் அமைக்கப்பட்டிருந்த தளம் உடைந்து விழுந்ததில் பக்தர்கள் 35 பேர் உயிரிழந்தனர்.
இந்தூர் அருகே படேல் நகரில் பெலீஷ்வர் மகாதேவ் கோயில் உள்ளது. இந்த கோயிலில் இருந்த கிணற்றின் மேல் பரப்பு தளம் பல ஆண்டுகளுக்கு அமைக்கப்பட்டிருந்தது. நேற்று ராமநவமி என்பதால் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் அந்த கோயிலில் வழிபாடு நடத்தினர்.
அப்போது எதிர்பாராத விதமாகக் கிணற்றின் மேல் இருந்த தரைத்தளம் உடைந்து விழுந்தது. அதில் மேல் பரப்பில் நின்று கொண்டிருந்த பக்தர்கள் தவறி 50 அடி ஆழக் கிணற்றில் தவறி விழுந்தனர். இதில் பெரும்பாலானோர் குழந்தைகள் மற்றும் பெண்கள் எனத் தெரிகிறது. இந்நிலையில் கிணற்றுக்குள் விழுந்தவர்களை மீட்கும் பணியில் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 35 பேர் இறந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து அறிந்ததும் ஏராளமானோர் கோயிலில் குவிந்தனர். அவர்களைக் கட்டுப்படுத்தும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டனர். கிணற்றுக்குள் சிக்கியிருப்போரைத் தேடும் பணிகளில் பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து, மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவிக்கையில், கிணற்றில் விழுந்தவர்களைக் காப்பாற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். பிரதமர் மோடி தெரிவிக்கையில், கோயிலில் நடத்த விபத்து அறிந்து மிகவும் வருந்துவதாகவும், இறந்தவர்களில் குடும்பங்களுக்கு இறங்கல் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Accident, Madhya pradesh, Temple