முகப்பு /செய்தி /இந்தியா / 2G Case Update | ஆ.ராசா உள்ளிட்டோரை விடுவித்தது அப்பட்டமான சட்ட விதிமீறல்... சிபிஐ வாதம்...!

2G Case Update | ஆ.ராசா உள்ளிட்டோரை விடுவித்தது அப்பட்டமான சட்ட விதிமீறல்... சிபிஐ வாதம்...!

ஆ.ராசா

ஆ.ராசா

2G Case Update | ஆ.ராசா உள்ளிட்டோரை விடுவித்த சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பு பிழையானது என்று சிபிஐ வாதிட்டது.

  • Last Updated :
  • Delhi Cantonment, India

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் ஆ.ராசா உள்ளிட்டோரை விடுவித்தது சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு அப்பட்டமான சட்ட விதிமீறல் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ., அமலாக்கத்துறை ஆகியவை தனித்தனியாக வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்குகளில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்ளிட்டோரை விடுவித்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம், கடந்த 2017-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து, கடந்த 2018ம் ஆண்டில் சிபிஐ தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி தினேஷ் குமார் சர்மா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் சி.பி.ஐ. தரப்பில் அளித்த சாட்சியங்களை நிராகரித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதாக முறையிட்டார். ஆ.ராசா உள்ளிட்டோரை விடுவித்த சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பு பிழையானது என்றும், அவற்றில் உள்ள சட்ட முரண்களை முன்வைக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க... கடைகளில் பில் போட செல்போன் நம்பர் கொடுக்க வேண்டாம்... வந்தது அதிரடி உத்தரவு...!

top videos

    இதையடுத்து, வழக்கின் விசாரணையை வரும் 29ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

    First published:

    Tags: 2G case