அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வரும் நிலையில், நேற்று நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இந்தியவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் டல்லாஸ் என்ற நகர் உள்ளது. அதன் அருகே அலேன் ப்ரீமியம் மால் என்ற மாபெரும் ஷாப்பிங் மால் உள்ளது. இந்த மாலுக்குள் நேற்று மாலை 3.30 மணி அளவில் 33 வயதான வாலிபர் திடீரென துப்பாக்கியுடன் புகுந்து அங்கிருந்த மக்களை நோக்கி சரிமாரியாக சுடத் தொடங்கினார்.
இதனால் அப்பகுதியே களேபரமானது. விஷயம் தெரிந்து மாலின் செக்யூரிட்டி அங்கு விரைந்து அந்த வாலிபரை சுட்டு வாழ்த்தினர். இதற்குள்ளாக வாலிபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தனர். 7 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவ இடத்தில் உயிரிழந்த 8 பேரில் 27 வயதான இந்திய இளம்பெண்ணான ஐஸ்வர்யா தட்டிகொண்டா என்பவரும் அடக்கம். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா. இவரது தந்தை நர்சி ரெட்டி ரெங்காரெட்டி மாவட்டத்தில் மாவட்ட நீதிபதியாக உள்ளார்.
இதையும் படிங்க: குதிரை சவாரியின்போது விபத்து.. 23 வயதான பிரபஞ்ச அழகி இறுதிப் போட்டியாளர் பரிதாப மரணம்!
ஐஸ்வர்யா தனது முதுகலை பட்டத்தை அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் முடித்துவிட்டு, அங்கே தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று தனது நண்பர்களுடன் ஐஸ்வர்யா மாலிற்கு ஷாப்பிங் சென்றுள்ளார். அப்போது தான் இவர் கோர சம்பவத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். ஐஸ்வர்யாவின் உடலை இந்தியா கொண்டுவருவதற்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் தரப்பில் இருந்து முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hyderabad, Us shooting, USA