கடந்த ஏப்ரல் 4-ம் தேதி அன்று டெல்லியில் உள்ள ஜசோலா மெட்ரோ ரயில் நிலையத்திற்கு 26 வயதான ராஜேஷ் குமார் என்ற நபர் வந்துள்ளார். இவர் தனியார் மருத்துவமனையில், ஹவுஸ்கீப்பிங் பணியாளராக இருப்பவர். இவர் அன்றைய தினம் ரயில்நிலையத்தில் உள்ள லிப்ட் ஒன்றில் பயணித்துள்ளார்.
அப்போது ஆர்க்கிடெக்ட் பணியில் இருக்கும் பெண் ஒருவரும் மெட்ரோ ஸ்டேஷனுக்கு வந்து அதே லிப்டில் பயணித்துள்ளார். லிப்டில் இவர்கள் இருவர் மட்டுமே தனியாக இருந்த நிலையில், அந்த நேரம் பார்த்து ராஜேஷ் குமார் திடீரென பாலியல் தொல்லை தந்துள்ளார்.
தனியாக இருந்த அந்த பெண்ணின் முன் தனது அந்தரங்க உறுப்புகளை காட்டியும் சீண்டியும் தொல்லை செய்துள்ளார் ராஜேஷ். பதறிப்போன அந்த பெண் கூச்சலிடவே, லிப்ட் மேல் தளத்திற்கு வந்துள்ளது. லிப்ட் கதவு திறந்ததும் அந்த நபர் ராஜேஷ் அங்கிருந்த தப்பி ஓட்டம் பிடித்தார்.
இதையும் படிங்க: இளைஞரின் ஆணுறுப்பை கடித்து குதறிய நாய்... ஊர் மக்கள் கூடி எடுத்த அந்த முடிவு...!
ஆனால், பாதிப்புக்கு ஆளான பெண் உடனடியாக அங்கிருந்த காவல் நிலையத்திற்கு சென்று தனக்கு நேர்ந்த கொடுமையை விவரித்து போலீசாரிடம் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள தொடங்கினர். சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து அடையாளம் கண்டுகொண்ட போலீசார், உள்ளூர் மக்களின் உதவியுடன் குற்றச்செயலில் ஈடுபட்ட ராஜேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Delhi, Sexual abuse, Sexual harassment