முகப்பு /செய்தி /இந்தியா / கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம்.. 24 அமைச்சர்கள் பதவியேற்பு

கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம்.. 24 அமைச்சர்கள் பதவியேற்பு

காங்கிரஸ் புதிய அமைச்சரவை பொறுப்பேற்பு

காங்கிரஸ் புதிய அமைச்சரவை பொறுப்பேற்பு

கர்நாடக அமைச்சரவையில் 24 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

  • Last Updated :
  • Karnataka, India

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்துள்ளது. கடந்த 20ஆம் தேதி, முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும், 8 அமைச்சர்களும் பதவியேற்றனர். இந்த நிலையில் அமைச்சரவையில் அனைத்து சமூகத்தினருக்கும் இடமளிப்பது குறித்து அண்மையில் டெல்லியில் ஆலோசனை நடத்தப்பட்டது.

முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டிகே சிவக்குமார் ஆகியோர் டெல்லியில் சோனியா காந்தி உள்ளிட்ட மேலிடத் தலைவர்களிடம் ஆலோசித்து அமைச்சரவை பட்டியலை தயார் செய்தனர். தொடர்ந்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி புதிய அமைச்சரவை பட்டியலை வெளியிட்டது. விரிவாக்கம் செய்யப்பட்ட அமைச்சரவையில் தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோர் இடம்பிடித்தனர்.

இவர்களுக்கான பதவியேற்பு விழா பெங்களூருவில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் ஆகியோர் பங்கேற்றனர். இதில் 24 எம்எல்ஏ-க்களுக்கு அமைச்சர்களாக ஆளுநர் தவர்சந்த் கெலாட், பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அமைச்சரவையில் ஒரு பெண்ணுக்கு இடம் கிடைத்துள்ளது.

இதையும் படிங்க: பாஜகவின் 9 ஆண்டு ஆட்சி... மோடியிடம் 9 விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ்

இந்நிலையில், பஞ்சாரா சமூகத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ருத்ரப்பா லமானிக்கு(Rudrappa Lamani) அமைச்சர் பதவி வழங்கப்படாததை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் காங்கிரஸ் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டமன்ற தேர்தலில் பஞ்சாரா சமூகத்தின் 75 சதவிகித வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்ததாகவும், குறைந்தது ஒரு அமைச்சர் பதவியாவது தங்களது சமூகத்திற்கு வழங்க வேண்டும் என்றும் ருத்ரப்பா லமானி ஆதரவாளர்கள் வலியுறுத்தினர்.

top videos
    First published:

    Tags: CM Siddramaiah, Congress, Karnataka