பாஜகவை பூஜ்ஜியம் ஆக்குவதற்கு எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விருப்பம் தெரிவித்துள்ளார்.
2024 மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்கட்சிகள் ஓரணியில் திரள முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இதனை சாத்தியமாக்கும் முயற்சியாக, எதிரணியை இணைக்கும் பணியில் பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஆர்வம் காட்டி வருகிறார்.
வெயிலுக்கு ரெஸ்ட்... தமிழ்நாட்டை கூல் பண்ணப் போகும் மழை... 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து பேசிய அவர், எதிர்வரும் தேர்தலில் இணைந்து பணியாற்றுவோம் என்று ஆதரவு கரம் நீட்டினார். இதனை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோரை சந்தித்து நிதிஷ் குமார் ஆதரவு திரட்டினர்.
இம்முயற்சியின் அடுத்த பாய்ச்சலாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை நிதிஷ்குமார் மற்றும் தேஜஸ்வி யாதவ் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து 3 பேரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, நாடாளுமன்ற தேர்தலில் இணைந்து பணியாற்றுவது குறித்து மம்தாவிடம் பேசியதாக நிதிஷ் குமார் தெரிவித்தார்.
பின்னர் பேசிய மம்தா பானர்ஜி, பாஜகவை வீழ்த்த தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்றி அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று கூறினார். பாஜகவை எதிர்ப்பதற்கு அமையும் மெகா கூட்டணிக்கான ஒருங்கிணைப்பில், தனக்கு எவ்வித ஈகோவும் இல்லை என்று மம்தா தெரிவித்தார்.
இதையும் வாசிக்க: காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக் கைதா..? டெல்லி போலீசார் விளக்கம்
இதன் பின்னர், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை நிதிஷ் குமார் மற்றும் தேஜஸ்வி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். காங்கிரஸ் அல்லாத எதிர்க்கூட்டணியை அமைக்க ஆம் ஆத்மி, திரிணமூல் உள்ளிட்ட கட்சிகள் திட்டமிட்டு இருந்ததாக தகவல் வெளியாகியது. ஆனால், பாஜகவிற்கு எதிராக வலுவான ஒற்றை அணியே அவசியம் என்று பல்வேறு அரசியல் தலைவர்கள் அறிவுறுத்தினர். இதற்கு ஏற்ப, ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு திரிணாமூல், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் கண்டனக் குரலை எழுப்பின.
தற்போது, எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் நிதிஷ் குமாரின் முயற்சிக்கும் இக்கட்சிகள் பெரிய அளவில் மாற்றுக் கருத்தோ எதிர்ப்போ தெரிவிக்கவில்லை. எனவே, எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் நிதிஷ்குமாரின் முயற்சி சாதகமான பாதையில் செல்வதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mamata Banerjee