முகப்பு /செய்தி /இந்தியா / பஞ்சாப் ராணுவ முகாமில் துப்பாக்கிச் சூடு.. 2 தமிழக வீரர்கள் மரணம்

பஞ்சாப் ராணுவ முகாமில் துப்பாக்கிச் சூடு.. 2 தமிழக வீரர்கள் மரணம்

உயிரிழந்த வீரர்கள்

உயிரிழந்த வீரர்கள்

5 வீரர்கள் உயிரிழந்த நிலையில் அதில் 2 வீரர்கள் தமிழர்கள் என்பது தெரியவந்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பஞ்சாப் மாநிலம், பதிண்டா ராணுவ முகாமில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதிண்டா ராணுவ முகாமில் நேற்று அதிகாலை 4.35 மணி அளவில் துப்பாக்கியால் சரமாரியாகச் சுடும் சத்தம் கேட்டது. இதையடுத்து, ராணுவ முகாமின் நுழைவுவாயில்கள் மூடப்பட்டுத் தேடுதல் வேட்டை நடைபெற்றது. அப்போது, ராணுவ முகாமில் 4 வீரர்கள் இறந்து கிடந்தனர். இது பயங்கரவாதத் தாக்குதல் கிடையாது என்றும், ராணுவ வீரர் ஒருவருக்கு இந்தத் தாக்குதலில் தொடர்பு இருப்பதாகவும் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் சாகர் பன்னே, கமலேஷ், யோகேஷ்குமார், சந்தோஷ் நகரல் என்ற ராணுவ வீரர்கள் என்பது தெரிய வந்துள்ளது. அதில், கமலேஷின் சொந்த ஊர் சேலம் மாவட்டம், நங்கவள்ளி அருகே பெரிய வனவாசி பனங்காடு பகுதி ஆகும். இவருடைய தந்தை ரவி, தாய் செல்வமணி ஆகியோர் நெசவு தொழில் செய்து வருகின்றனர். திருமணமாகாத நிலையில், பதிண்டா ராணுவ முகாமில் நடந்த தாக்குதலில் கமலேஷ் உயிரிழந்ததால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Also Read : அதிகரிக்கும் கொரோனா பரவல் - மீண்டும் கோவிஷீல்டு உற்பத்தியைத் தொடங்கிய சீரம் நிறுவனம்

இதேபோன்று, ராணுவ முகாமில் உயிரிழந்த 19 வயதான யோகேஷ்குமார், தேனி மாவட்டம், தேவாரம் அடுத்த மூனாண்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். இதையடுத்து இருவரது உடல்களையும் இன்று சொந்த ஊருக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

top videos
    First published:

    Tags: Gun shoot, Punjab