முகப்பு /செய்தி /இந்தியா / பறக்கும் விமானத்தில் பார்ட்டி.. கலாட்டா செய்து பயணிகளுக்கு தொந்தரவு.. இருவர் கைது

பறக்கும் விமானத்தில் பார்ட்டி.. கலாட்டா செய்து பயணிகளுக்கு தொந்தரவு.. இருவர் கைது

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

மதுபோதையில் விமானத்திற்குள் கலாட்ட செய்த இருவரை மகாராஷ்டிரா காவல்துறை கைது செய்துள்ளது.

  • Last Updated :
  • Maharashtra, India

பறக்கும் விமானத்தில் பயணிகள் அத்துமீறும் சம்பவங்கள் சமீப காலமாகவே அதிகரித்து வரும் நிலையில், சமீபத்தில் இதேபோல குடித்து விட்டு கலாட்ட செய்த இரு பயணிகளை மகாராஷ்டிரா காவல்துறை கைது செய்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் இருந்து மகாராஷ்டிரா தலைநகர் மும்பை நோக்கி கடந்த நேற்று இன்டிகோ நிறுவன விமானம் வந்துள்ளது. இந்த விமானத்தில் ஜான் டிசௌசா (வயது 49), தத்தாத்ரேய் பபர்தேகர் (வயது 47) ஆகிய இருவர் பயணித்துள்ளனர். இவர்கள் இருவரும் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் துபாயில் ஓராண்டு வேலை பார்த்துவிட்டு ஊருக்கு திரும்பியுள்ளனர்.

இதை கொண்டாடும் விதமாக துபாயில் உள்ள கடையில் மதுபாட்டில்களை வாங்கிக் கொண்டு விமானத்தில் ஏறியுள்ளனர். காலை 8 மணிக்கு விமானம் பறக்கத் தொடங்கியதும், பையில் உள்ள மதுபாட்டிலை எடுத்து குடிக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் சக பயணிகள் அதிர்ச்சி அடைந்து விமான பணிப்பெண்கள் மற்றும் ஊழியர்களிடம் புகார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து விமான ஊழியர்கள் பயணிகள் இருவரையும் இவ்வாறு செய்யக்கூடாது என எச்சரித்துள்ளனர்.

இது சட்ட விதிமீறல் என எடுத்துக்கூறியுள்ளனர்.ஆனால், அவர்களின் பேச்சை கேட்காத இரு பயணிகளும், குடிப்பதை நிறுத்தாமல் தொடர்ந்துள்ளனர். அத்தோடு நிற்காமல் ஊழியர்களையும் சக பயணிகளையும் சரமாரியாக திட்டி வசை பாடி கலாட்டா செய்துள்ளனர். இதனால், பறந்து கொண்டிருந்த விமானத்தில் குழப்பமான சூழல் நிலவியது.

இதையும் படிங்க: ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை..! சூரத் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

இதைத் தொடர்ந்து விமானம் மும்பையில் தரையிறங்கியதும் இருவரையும் பிடித்து CSIF வீரர்களிடம் இன்டிகோ விமான குழு ஒப்படைத்தது. தொடர்ந்து இருவரையும் கைது செய்த காவல்துறை , அவர்கள் மீதும் இபிகோ 336 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ததது.இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மற்ற பயணிகளிடம் மன்னிப்பு கேட்பதாக இன்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

First published:

Tags: Alcohol, Crime News, Flight Crew, Maharashtra, Passengers