முகப்பு /செய்தி /இந்தியா / சூடான் போர்... ஆபரேஷன் காவிரி திட்டத்தின் மூலம் 1,950 இந்தியர்கள் மீட்பு

சூடான் போர்... ஆபரேஷன் காவிரி திட்டத்தின் மூலம் 1,950 இந்தியர்கள் மீட்பு

சூடான் கலவரம்

சூடான் கலவரம்

ஆபரேசன் காவிரி திட்டத்தின் மூலம் சூடானிலிருந்து 1,954 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

  • Last Updated :
  • international, Indiasudan

ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையேயான போர் மூண்டுள்ளது. சுமார் 20 நாட்களாக இந்தச் சண்டை நீடித்து வருகிறது. இதனால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அங்கு 3,000 மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளனர்.

இந்நிலையில், இந்தியர்களை மீட்பதற்காக ஆபரேஷன் காவேரி என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்த ஆபரேஷன் காவிரி மூலம் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியர்கள் மீட்கப்பட்டுவருகின்றனர். தற்போது, ‘ஆபரேஷன் காவிரி’ மூலம் மேலும் 299 இந்தியர்கள் சூடானில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

முதல் கட்டமாக, ஏப்ரல் 26ஆம் தேதி 360 பேரும், இரண்டாவது கட்டமாக, 246 பேரும் மீட்கப்பட்டனர். ஏப்ரல் 28 ஆம் தேதி 754 இந்தியர்களும் சூடானில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டு அழைத்து வரப்பட்டனர்.

top videos

    இந்த நிலையில், மேலும் ஒரு விமானம் மூலம் 229 பேர் சூடானில் இருந்து பெங்களூருவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இதனை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதுவரை மொத்தம் 1,954 பேர் சூடானில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

    First published: