முகப்பு /செய்தி /இந்தியா / நண்பருடன் தனிமையில் இருந்த 16 வயது சிறுமி... படகில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்கள்.. பகீர் சம்பவம்

நண்பருடன் தனிமையில் இருந்த 16 வயது சிறுமி... படகில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்கள்.. பகீர் சம்பவம்

படகில் சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை

படகில் சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை

தனது தாயுடன் மருத்துவ சிகிச்சைக்காக வந்த சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார்.

  • Last Updated :
  • Madhya Pradesh, India

16 வயது சிறுமியை படகில் வைத்து 5 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில் சித்தரகூட் என்ற பகுதி உள்ளது. இப்பகுதிக்கு அருகே உள்ள பருந்தா கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி தனது தாயுடன் மருத்துவ சிகிச்சைக்காக வந்துள்ளார். இந்த ஊரில் சிறுமியின் நண்பரான மனோஜ் யாதவ் என்பவர் இருந்துள்ளார். இவர் சிறுமியின் குடும்பத்திற்கும் அறிமுகமானவர்.

இந்நிலையில், சம்பவம் நடைபெற்ற மே 5 ஆம் தேதி அன்று மாலை மருத்துவ சிகிச்சை முடித்து விட்டு நேரமானதால் கிராமத்திற்கு திரும்பாமல் மனோஜ் வீட்டிலேயே சிறுமியும் தாயாரும் தங்க முடிவு செய்தனர். பின்னர், இரவு வேளையில், மனோஜ் மற்றும் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி தனியாக மந்தாகினி நதிக்கரைக்கு தனியாக அழைத்து சென்று அவரிடம் அத்துமீறியிருக்கிறார். அப்போது, அப்பகுதியில் வசிக்கும் மனோஜை அறிந்த 5 இளைஞர்கள் அங்கு வந்துள்ளனர். இவர்களின் செயல்களை பார்த்த அவர்கள், இடைமறித்து தாக்கி இருவரையும் படகில் கடத்தி சென்றனர்.

படகை நதிக்குள் கொண்டு சென்று 5 பேரும், அங்கு வைத்து சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். அதன் பின்னர், அதிகாலை வேளையில் சிறுமியை விட்டு தப்பியோடினர். சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை தாயிடம் கூறவே, சித்தரகூட் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதையும் படிங்க: வெட்டுக்காயத்தை பெவிகுவிக் போட்டு ஒட்டிய மருத்துவர்... தெலங்கானாவில் அதிர்ச்சி!

top videos

    புகாரின் பேரில் சிறுமியின் நண்பர் மனோஜ் யாதவ் மற்றும் ஏனைய 5 பேரான வினோத் நிஷாத், ராம் கோபால், மோஹித் நிஷாத், பங்கஜ் ஜோஷி, சந்தோஷ் குஷ்வாஹா ஆகிய ஆறுபேரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது. இவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Crime News, Gang rape, Minor girl, POCSO case