முகப்பு /செய்தி /இந்தியா / தண்டவாளத்தில் ரீல்ஸ் வீடியோ எடுக்க ஆசை... ரயிலில் அடிபட்டு சிறுவன் பரிதாப பலி..!

தண்டவாளத்தில் ரீல்ஸ் வீடியோ எடுக்க ஆசை... ரயிலில் அடிபட்டு சிறுவன் பரிதாப பலி..!

உயிரிழந்த இளைஞர் முகமது சர்பராஸ்

உயிரிழந்த இளைஞர் முகமது சர்பராஸ்

Train Accident | தனது அருகே ரயில் செல்வது போல இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ எடுக்க வேண்டும் என ஆசை முகமது சர்பாராஸுக்கு வந்துள்ளது.

  • Last Updated :
  • Telangana, India

சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் மோகம் காரணமாக இளைய தலைமுறையினர் விபரீத செயல்களில் ஈடுபடுவது சமீப காலங்களில் வாடிக்கையாகியுள்ளது. அத்தகைய விபரீத செயல் ஒன்று 16 வயது சிறுவனின் உயிரை காவு வாங்கியுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த முகமது சர்பாராஸ்.  இவர் அங்குள்ள சன்னத் நகர் பகுதியைச் சேர்ந்தவர். 9ஆம் வகுப்பு மாணவரான இவர், கடந்த புதன்கிழமை அன்று மதிய வேளையில் வீட்டை விட்டு நண்பர்களுடன் வெளியே வந்துள்ளார்.

தனது வீட்டில் தொழுகைக்கு செல்கிறேன் எனக் கூறி தனது நண்பர்கள் முஸ்மில் மற்றும் சௌஹால் ஆகியோருடன் அருகே உள்ள ரயில்வே டிராக் பகுதிக்கு வந்துள்ளார். அங்கு வைத்து தனது அருகே ரயில் செல்வது போல இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ எடுக்க வேண்டும் என ஆசை வந்துள்ளது. எனவே, ரயில்வே டிராக் முன்னர் நின்று வீடியோ எடுத்துள்ளார்.

அப்போது அங்கு வந்த ரயில் மோதி சம்பவ இடத்திலேயே முகமது உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே காவல்துறையினர், உடலை மீட்டு ஒஸ்மானியா மருத்துவக் கல்லூரியில் பிரேத பரிசோதனைக்காக அணுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: நண்பருடன் தனிமையில் இருந்த 16 வயது சிறுமி... படகில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்கள்.. பகீர் சம்பவம்

top videos

    மேலும், சம்பவ இடத்தில் இருந்து செல்போனை பறிமுதல் செய்தனர். சம்பவம் தொடர்பாக வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. ரீல்ஸ் மோகத்திற்காக இளைஞர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    First published:

    Tags: Accident, Hyderabad, Instagram, Viral Video