முகப்பு /செய்தி /இந்தியா / அந்தரங்க போட்டோவை வெளியிடுவேன்.. மிரட்டிய இளைஞர் - சிறுமி மரணத்தில் வெளியான பகீர் தகவல்

அந்தரங்க போட்டோவை வெளியிடுவேன்.. மிரட்டிய இளைஞர் - சிறுமி மரணத்தில் வெளியான பகீர் தகவல்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

அந்தரங்க தருணங்களை  தொலைபேசியில் பதிவு செய்து வைத்துள்ளதாகவும்,  அதனை  இணையத்தில் வெளியிட உள்ளதாகவும் மிரட்டியுள்ளான்

  • Last Updated :
  • Tamil Nadu, India

அந்தரங்க போட்டோக்களை வெளியிடுவதாக இளைஞர் மிரட்டிய நிலையில் 16வயது சிறுமி வீட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையின் அடுக்குமாடி குடியிருப்பில் இரவு நேரத்தில் 16-வயது சிறுமி மாடியில் இருந்து குதித்து மரணமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். சிறுமி மாடியில் இருந்து தவறி விழுந்தாரா அல்லது தற்கொலை செய்துக்கொண்டார் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

சிறுமியின் சகோதரியிடம் விசாரணை மேற்கொண்டனர். மாலையில் வாக்கிங் சென்ற போது இளைஞர் ஒருவர் வந்து பேசி சண்டையிட்டதாக கூறியுள்ளார். சம்பவம் நடந்த அன்று மாலை சிறுமி தனது சகோதரி மற்றும் தோழிகளுடன் சாலையில் சென்றுள்ளார்.

அப்போது சிறுமிக்கு பழக்கமான இளைஞர் ஒருவர் வந்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை தட்டிக்கேட்ட சிறுமியின் சகோதரி மற்றும் தோழிகளை அந்த நபர் தாக்க முற்பட்டுள்ளார். சிறுமியிடம் வாக்குவாதம் செய்த அந்த இளைஞர் உன்னுடைய அந்தரங்க போட்டோக்களை செல்போனில் பதிவு செய்து வைத்துள்ளேன். அதனை இண்டர்நெட்டில் வெளியிட்டு உன் மானத்தை வாங்கிவிடுவேன் என மிரட்டி சென்றது போலீஸாரின் விசாரனையில் தெரியவந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியும், மன உளைச்சலும் ஆளான சிறுமி வீட்டுக்கு வந்து, மொட்டை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதையும் வாசிக்க: மதுவால் அழிந்த குடும்பம் - தவிக்கும் 3 குழந்தைகள்

சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் அவரது ஜாதவ் என்ற இளைஞனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

First published:

Tags: Crime News, Cyber crime