முகப்பு /செய்தி /இந்தியா / ரிஸ்க் ஆப்ஸ்.. தீவிரவாத குழுக்கள் பயன்படுத்திய செயலிகள்.! அதிரடியாக தடை செய்த மத்திய அரசு..

ரிஸ்க் ஆப்ஸ்.. தீவிரவாத குழுக்கள் பயன்படுத்திய செயலிகள்.! அதிரடியாக தடை செய்த மத்திய அரசு..

மாதிரிப்படம்..!

மாதிரிப்படம்..!

பயங்கரவாத செயல்களுக்கு எதிரான முக்கிய நடவடிக்கையாக ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள தீவிரவாத குழுக்களால் பயன்படுத்தப்பட்டு வந்த 1 டஜனுக்கும் மேற்பட்ட மொபைல் மெசஞ்சர் ஆப்ஸ்களை மத்திய அரசு தடை செய்து உள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பயங்கரவாதிகள் தங்கள் ஆதரவாளர்கள் மற்றும் Over Ground Workers-களுடன் (OGW) தொடர்பு கொள்ள, பாகிஸ்தானிடம் இருந்து அறிவுறுத்தல்களை பெறவும் பயன்படுத்தியதாகக் கூறப்படும் 14 மொபைல் மெசேஜிங் அப்ளிகேஷன்களை மத்திய அரசு தடை செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ள 14 ஆப்ஸ்கள், குறிப்பாக ஜம்மு மற்றும் காஷ்மீர் பயங்கரவாத குழுக்களால் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த `14 மெசேஜிங் ஆப்ஸ்களும் பயங்கரவாதிகளால் தகவல் தொடர்பு சாதனமாகவும், பயங்கரவாத பிரச்சாரத்தை பரப்பவும் பயன்படுத்தப்பட்டதாகவும் அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. Crypviser, Enigma, Safeswiss, Wickrme, Mediafire, Briar, BChat, Nandbox, Conion, IMO, Element, Second line, Zangi, Threema உள்ளிட்ட 14 மொபைல் மெசஞ்சர் ஆப்ஸ்களே சமீபத்தில் இந்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அமைப்புகளின் பரிந்துரையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-த்தின் செக்ஷன்69A-ன் கீழ் மேற்கண்ட இந்த ஆப்ஸ்கள் Block செய்யப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர். முன்னதாக இந்த ஆப்ஸ்கள் டிஃபென்ஸ் ஃபோர்ஸ், செக்யூரிட்டி, இன்டெலிஜென்ஸ் மற்றும் இன்வெஸ்ட்டிகேஷன் உள்ளிட்ட பல ஏஜென்சிகளால் விசாரிக்கப்பட்டன. விசாரணையில் இந்த ஆப்ஸ்கள் ஜம்மு காஷ்மீரில் உள்ள இளைஞர்களை நாட்டுக்கு எதிராக மூளைச்சலவை செய்யவும், அவர்களிடையே பயங்கரவாத பிரச்சாரத்தை பரப்பவும் பயன்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது.

Read More : மொபைல் ஃபோன இப்படி மட்டும் சார்ஜ் பண்ணாதீங்க..!

எப்படி கண்டுபிடிக்கப்பட்டன.? : மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ளதாக பட்டியலிடப்பட்டுள்ள ஆப்ஸ்கள், தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான பாதுகாப்பு படையினரின் அதிரடி நடவடிக்கையில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட ஸ்மார்ட் போன்களில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக விளக்கமளித்துள்ள அதிகாரிகள் ஓவர்கிரவுண்ட் தொழிலாளர்கள் (OGWs) மற்றும் பயங்கரவாதிகள் தங்களுக்குள் தொடர்பு கொள்ள பயன்படுத்தும் சேனல்களை வழக்கமாக ஏஜென்சிகள் கண்காணிக்கும்.

அந்த வகையில் அவர்களின் தகவல்தொடர்புகளில் ஒன்றை கண்காணிக்கும் போது, மொபைல் அப்ளிகேஷனின் நிறுவனர்கள் மற்றும் பிரதிநிதிகள் இந்தியாவில் இல்லை என்பதையும், ஆப்ஸில் நடக்கும் செயல்பாடுகளை கண்காணிப்பது கடினமாக இருப்பதையும் ஏஜென்சிகள் கண்டறிந்தனர். பின் ஜம்முவில் செயல்படும் பிற புலனாய்வு அமைப்புகளின் உதவியுடன், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் மற்றும் இந்திய சட்டங்களை பின்பற்றாத இதுபோன்ற ஆப்ஸ்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது என்றனர்.மேலும் தகவல் அளித்துள்ள அதிகாரிகள், பயங்கரவாதிகள் பயன்படுத்தும் ஆப்ஸ்கள் Heavy Encryption-ஐ கொண்டுள்ளன. இது யூஸர்களுக்கு Privacy மற்றும் Anonymity-ஐ வழங்குகிறது, இதனால் கன்டென்டை அணுகுவது கடினமாகிறது.

top videos

    தவிர இது போன்ற ஆப்ஸ்கள் வெவ்வேறு நாடுகளில் உள்ள சர்வர்களை கொண்டுள்ளன. எனவே அவற்றின் ஆர்ஜினை கண்டுபிடிப்பதில் அதிக சிரமம் ஏற்படுகிறது என்றனர். இந்த வகையான ஆப்ஸ்கள் மூலம், பயங்கரவாத அமைப்புகளும் அவற்றின் துணை அமைப்புகளும் ஜம்மு காஷ்மீரில் உள்ள தங்கள் கூட்டாளிகளை யூனியன் பிரதேசம் மற்றும் பிற இடங்களில் தங்கள் பயங்கரவாத நடவடிக்கைகளை மேலும் அதிகரிக்க செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் மொபைல் அப்ளிகேஷன்களுக்கு எதிராக மத்திய அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை முதல் முறை அல்ல. நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடுமற்றும் பொது ஒழுங்கிற்கு பாதகம் விளைவிப்பதாக குற்றம் சாட்டி, பல சீன ஆப்ஸ்களை இந்திய அரசு தடை செய்தது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: Scam