உத்தரப் பிரதேச மாநிலத்தின் பலியா மாவட்டத்தில் உள்ள சைத்பூர் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி மான்சி. இந்த சிறுமி கடந்த சனிக்கிழமை மாலை அன்று வழக்கம் போல வீட்டில் இருந்த செல்போனுக்கு சார்ஜ் போட சென்றுள்ளார். அப்போது லைவ் வயரில் இருந்த மின்சாரம் சிறுமி மீது பாய்ந்துள்ளது.
மின்சாரம் உடலில் பாய்ந்தும் அலறி விழுந்த சிறுமி அங்கு மூர்ச்சையானார். சத்தம் கேட்டு பதறிப்போன குடும்பத்தார் சிறுமியை தூக்கிக் கொண்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு கவலைக்கிடமாக இருந்த சிறுமி மருத்துவமனையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குடும்பத்தாரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடைபெறுகிறது.
இதையும் படிங்க: முதலிரவில் இருவரும் மரணம்... உத்தரப் பிரதேசத்தில் இளம் ஜோடிக்கு நேர்ந்த சோகம்!
இது போன்ற மின்சார தாக்குதல் சம்பவங்கள் சமீப காலமாக நிகழ்ந்து வருகின்றன. மும்பையை சேர்ந்த முனிரா என்ற 10 வயது சிறுமி தனது நண்பர்களுடன் பேட்மின்டன் விளையாடிக் கொண்டிருந்த போது, மின்கசிவு இருந்த வயரை மிதித்து பரிதாபமாக உயிரிழந்தார். அதேபோல, கடந்தாண்டு சத்தீஸ்கரிலும் குடியரசு தின கொண்டாட்டத்தின் போது கொடிக்கம்பத்தின் இருந்த மின்சாரம் 14 வயது சிறுமி மீது பாய்ந்து அவர் உயிரிழந்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mobile phone, Uttar pradesh