2021 டிசம்பர் முதல், தற்போது வரை 110 யூடியூப் செய்தி சேனல்கள் மற்றும் 248 சமூக ஊடக கணக்குகளை தடை செய்யப்பட்டுள்ளதாக மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். நாட்டில் பத்திரிக்கை சுதந்திரம் தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் அசாம் மக்களவை உறுப்பினர் Pradyut Bordoloi எழுப்பியு கேள்விக்கு அமைச்சர் இந்த பதிலை அளித்தார்.
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் கைது செய்யயப்பட்ட பத்திர்கையாளர்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் மாநிலத்து பட்டியலில் சட்டம் மற்றும் பாதுகாப்பு இடம் பெற்றுள்ளது. எனவே, சட்ட ஒழுங்கை பேணிக் காக்கும் நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன, மேலும், தேசிய குற்ற ஆவண காப்பகம் பத்திரிகையாளர்கள்/ ஊடகவியலாளர்கள் கைது நடவடிக்கை தொடர்பாக தனிப்பட்ட தரவுகளை பதிவு செய்வதில்லை" என்று தெரிவித்தார்.
தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் ஊடங்களை தொடர்பான கேள்விக்குப் பதில் அளித்த அமைச்சர், " டிஜிட்டல் ஊடகங்களை நெறிமுறைப்படுத்தும் விதமாக 20,00 மாவது ஆண்டின் தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்து 2021ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளைக் கொண்டுவந்தது. இந்த புதிய விதிமுறையின் கீழ் தவறும் செய்யும் ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2021 டிசம்பர் முதல் தற்போது வரை, 110 யூடியூப் செய்தி சேனல்கள், 248 சமூக ஊடக கணக்குகளை (இணையதளங்கள்/ இணைய பக்கங்கள், சமூக ஊடக கணக்குகள்) செய்வதற்கான உத்தரவுகளை தகவல் தொடர்பு துறை அமைச்சகத்தால் பிறப்பிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Youtube