முகப்பு /செய்தி /இந்தியா / சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதல் : பாதுகாப்பு படை வீரர்கள் 10பேர் பலி

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதல் : பாதுகாப்பு படை வீரர்கள் 10பேர் பலி

கோப்புப்படம்

கோப்புப்படம்

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 10 வீரர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.

  • Last Updated :
  • Chhattisgarh, India

சத்தீஸ்கர் மாநிலம் தன்டேவாடா மாவட்டத்தில் அரன்பூர் அருகே நக்சல் தடுப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென்று நக்சலைட்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 10 வீரர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அம்மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் நக்சல்கள் உடனான யுத்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக கூறிய அவர், நக்சலைட்டுகளால் அரசிடம் இருந்து தப்பிக்க முடியாது என்று எச்சரித்தார்.

top videos

    இதனிடையே தாக்குதல் தொடர்பாக பூபேஷ் பாகலுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டார். அப்போது மாநில அரசுக்கு அனைத்து வகையான உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக அமித்ஷா உறுதி அளித்தார்.

    First published:

    Tags: Army men, Chhattisgarh, Naxal Attack