முகப்பு /செய்தி /இந்தியா / உச்சி வெயிலில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பரிதாபம்.. 11 பேர் உயிரிழந்த சோகம்

உச்சி வெயிலில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பரிதாபம்.. 11 பேர் உயிரிழந்த சோகம்

மகாராஷ்ட்ரா

மகாராஷ்ட்ரா

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Maharashtra, India

மகாராஷ்டிராவில் அரசு விருது விழா நிகழ்ச்சியின்போது வெப்பஅலை தாக்கி 11 பேர் உயிரிழந்தனர். 24 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிர அரசு சார்பில் மகாராஷ்டிர பூஷண் விருது வழங்கும் நிகழ்ச்சி, நவிமும்பையில் நேற்று நண்பகலில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சமூக ஆர்வலர் அப்பாசாகேப் தர்மாதிகாரி-க்கு விருது வழங்கி கவுரவித்தார்.

இந்த விழாவில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் கலந்துகொண்ட நிலையில், மாநிலம் முழுவதிலுமிருந்து ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். ஆனால், முக்கிய நபர்களுக்கு மட்டுமே மேற்கூரை அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவானதால், நூற்றுக்கணக்கானோர் உடல் நிலை பாதிக்கப்பட்டது.

Also Read:  மத்திய அரசு ஆம் ஆத்மியை அழிக்க நினைக்கிறது - சிபிஐ விசாரணைக்கு பிறகு கெஜ்ரிவால் ஆவேசம்

இதனைத் தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், 24 பேர் சிகிச்சை பெற்று வருவதாக முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சந்தித்து ஏக்நாத் ஷிண்டே நலம் விசாரித்தார்.

top videos
    First published:

    Tags: Heat Wave, Maharashtra, Tamil News