முகப்பு /செய்தி /இந்தியா / பிரதமரின் “மனதின் குரல்” 100வது நிகழ்ச்சி - பொதுமக்களுக்கு அழைப்பிதழ் வைத்து பாஜக நிர்வாகிகள் அழைப்பு

பிரதமரின் “மனதின் குரல்” 100வது நிகழ்ச்சி - பொதுமக்களுக்கு அழைப்பிதழ் வைத்து பாஜக நிர்வாகிகள் அழைப்பு

மனதின் குரல் நிகழ்ச்சி

மனதின் குரல் நிகழ்ச்சி

பாஜக நிர்வாகிகள் நாதஸ்வரம் தவில் கலைஞர்களின் இசை கருவிகள் இசைத்து பொதுமக்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து வருகின்றனர்.

  • Last Updated :
  • Chennai, India

பிரதமரின் 100வது மனதின் குரல் நிகழ்ச்சிக்கு சென்னை நடுக்குப்பம் பகுதியில் வீடு வீடாக சென்று பொதுமக்களையும் மீனவர்களையும் அழைப்பிதழ் வைத்து நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு பாஜக நிர்வாகிகள் அழைப்பு விடுத்து வருகின்றனர்.

பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை அன்று பிரதமர் நரேந்திர மோடி வானொலியில் மக்களிடம் பேசுவது வழக்கம், அப்படி இதுவரை 99 முறை பிரதமர் நரேந்திர மோடி வானொலியில் உரையாற்றியுள்ளார். நூறாவது முறையாக அவர் பேச உள்ள நிகழ்ச்சி வரும் 30ஆம் தேதி  நடைபெறுகிறது. இதை இந்தியா முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் பல்வேறு விதமான மக்களிடம் எடுத்துச் சென்று வருகிறார்கள்.

top videos

    அதன் ஒரு பகுதியாக மக்களை மனதின் குரல் வானொலி நிகழ்ச்சிக்கு அழைக்கும் விதமாக சென்னை கடற்கரை பகுதியாக இருக்கும் நடுக்குப்பம் பகுதியில் பாஜக நிர்வாகிகள் நாதஸ்வரம் தவில் கலைஞர்களின் இசை கருவிகள் இசைத்து திருமணத்திற்கு அழைப்பது போல் மீனவர்களையும் பொதுமக்களையும் வீடு வீடாக சென்று பத்திரிகை வைத்து அழைத்தனர்

    First published:

    Tags: BJP, PM Modi, Tamil News