Home /namakkal /

Namakkal : நாட்டுக்கோழி வளர்ப்பில் ₹5 லட்சத்திற்கு மேல் வருமானம்.. வெளிநாட்டு வேலையை உதறிவிட்டு சாதித்துக்காட்டிய நாமக்கல் இளைஞர்..

Namakkal : நாட்டுக்கோழி வளர்ப்பில் ₹5 லட்சத்திற்கு மேல் வருமானம்.. வெளிநாட்டு வேலையை உதறிவிட்டு சாதித்துக்காட்டிய நாமக்கல் இளைஞர்..

நாமக்கல்

நாமக்கல்

Namakkal District : வெளிநாட்டு வேலையை உதறிவிட்டு நாட்டுக்கோழி பண்ணை அமைத்து அதன் மூலம் வெளிநாட்டில் சம்பாதித்ததை விட கூடுதலாக வருமானம் ஈட்டி வரும் நாமக்கல் மாவட்டத்தை இளைஞர் குறித்த செய்தி தொகுப்பையும் கோழி வளர்ப்பு குறித்தும் இந்த வீடியோவில் காணலாம்..

மேலும் படிக்கவும் ...
    வெளிநாட்டு வேலை வேண்டாம். நம் மண்ணில் சொந்த வேலை செய்து முன்னேற வேண்டும் என்று கடந்த 5 ஆண்டுகளாக நாட்டுக் கோழி வளர்ப்பில் நம்பிக்கையோடு ஈடுபட்டு, இன்று அதன் மூலம் ஆண்டுதோறும் 5 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டி அசத்தி வருகிறார் ஜீவா ஜனார்த்தனம் என்ற இளைஞர்.

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொக்கராயன்பேட்டை என்ற பகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டு அதன் மூலம் அதிக லாபம் ஈட்டி வரும் ஜீவா ஜனரர்த்தனம், தனது கல்லூரி படிப்பு முடித்து வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார்.

    வெளிநாட்டு வேலை தன்னுடைய வாழ்க்கைக்கு உகந்ததாக இருக்காது. அதுமட்டுமின்றி வாழும் காலத்தில் பெற்றோர்களுடன்  ஒன்றாக இருந்து நேரத்தை செலவிட வேண்டும் என்று மீண்டும் சொந்த ஊருக்கே திரும்பி வந்துள்ளார். அதன் பின் நம் மண்ணில் ஏதாவது சுயதொழில் செய்து அதன் மூலம் வெற்றியடைந்து வாழ்க்கை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கில் கோழி வளர்ப்பில் இறங்கி உள்ளார்.

    பண்ணையில் மேயும் கோழிகள்


    தொடர்ந்து ஜீவா ஜனார்த்தனம் கூறுகையில், " முதலில் இதுபோன்ற ஒரு தொழிலை தொடங்குகிறேன் என்று பெற்றோர்களிடம் கூறும் போது இதற்கு எதிர்ப்பு தான் வந்தது. வெளிநாட்டு வேலையை விட்டுவிட்டு இங்கு வந்து கோழி பண்ணை தொடங்கி எவ்வாறு லாபம் ஈட்ட முடியும் என்று அவர்களுக்கு கேள்விக்குறியாக இருந்தது. ஆனால் எனக்குள் இருந்த நம்பிக்கையை தெரிவித்து என்னால் வெற்றி அடைய முடியும் என்று ஒரு முயற்சியில் கோழி வளர்ப்பில் இறங்கினேன். தொடங்கும் போது பணம் வசதி இல்லாமல் மிகவும் சிரமப்பட்டேன். அதுமட்டுமின்றி தொடங்கிய சில மாதங்களிலே பெரிய நஷ்டம் ஏற்பட்டது.

    ஆனாலும் முயற்சியில் இருந்து பின் வாங்கக் கூடாது என்று மீண்டும் வெளிநாட்டிற்கு சென்று சில மாதங்கள் தங்கி வேலை பார்த்து அதன் மூலம் தேவையான பணத்தை கொண்டு வந்து கோழிகளுக்கு என்றே பெரிதளவில் பண்ணை அமைத்து எனது முயற்சியில் மீண்டும் இறங்கினேன்.

    எனது விடா முயற்சியால் இன்று கோழி வளர்ப்பில் மூலம் அதிக லாபம் ஈட்ட முடியும் என்று செய்து காட்டி வருகிறேன். நான் செய்வதை பார்த்து எனது பெற்றோர்களும் தற்போது எனக்கு மிகவும் உறுதுணையாக இருக்கின்றனர்.

    இளைஞர் ஜீவா ஜனார்த்தனன்


    எந்தவொரு கலப்பிடமும் இல்லாமல் சரியான முறையிலும், உரிய காலத்திலும் கோழிகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அளித்து தரமான கோழிகளாக வளர்த்தி வருகிறேன். இதனை அறிந்த உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் தேடி வந்து கோழிகளை வாங்கிச் செல்கின்றனர். தற்போது காகம், கிரி, வள்ளுவர், மயில், கொக்குவெள்ளை, பூதி , சொங்கருப்பு , டைகருப்பு போன்ற வகைகள் சேர்ந்த நாட்டுக்கோழிகளை வளர்த்தி வருகிறேன்.

    இளைஞர்கள் நிறைய பேருக்கு சுயதொழில் தொடங்க வேண்டும் என்று அதிகளவில் எண்ணம் இருக்கிறது. ஆனால் எதுபோன்ற வேலையை தொடங்க வேண்டும், பொருளாதார ரீதியாக எவ்வளவு உறுதியானக இருக்கிறோம் என்று அறிந்து லாபம் நஷ்டம் எதுவந்தாலும் ஒரே மாதிரியான மனநிலை கொண்டு விடா முயற்சியாக இருந்தால் நிச்சயமாக வெற்றி பெற முடியும். மேலும் நம் மண்ணில் வளர்த்த கோழிகளை அதிக அளவில் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பதே இலக்காகக் உள்ளது என்று ஜீவா ஜனார்த்தனம் தெரிவித்தார்.

    இளைஞர் ஜீவா ஜனார்த்தனன்




    கோழி வளர்ப்பு குறித்து ஏதேனும் சந்தேகங்களுக்கு விளக்கம் பெற விரும்பினால் 7904310701 என்ற எண்ணில் ஜீவா ஜனார்த்தனத்தை தொடர்பு கொள்ளலாம்..

    நாமக்கல்லில் இருந்து ஜீவாவின் கோழிப்பண்ணைக்கு செல்லும் பாதையை காட்டும் கூகுள் வரைபடம்..

    Namakkal

    செய்தியாளர்: மதன் - நாமக்கல்
    Published by:Arun
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி